கேரள மாநிலம், கொச்சியில் சுல்தானா (33) என்ற பெண்கள் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பெண்கள் விடுதியில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுமிகளும், பெண்களும் படிப்பதற்காக பணம் கொடுத்து தங்கி வருகின்றனர். ஆலப்புழாவைச் சேந்த சுல்த்தானாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள்களை விடுதியிலுள்ள பெண்களுக்கும் சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது விடுதிக்கு சில ஆண்கள் வந்து செல்வதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் சேதுராமன் உத்தரவின்பேரில் போலீஸார் அந்தப் பெண்கள் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் விடுதியில் தங்கியிருந்த சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள்கள் கொடுத்து, சிறார்வதை செய்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் சிறார்வதை செய்த 19 வயதான இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும், விடுதி நடத்தி அங்கு தங்கியிருக்கும் பெண்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்தது, மற்றும் சிறார் வதைக்கு உடந்தையாக இருந்தது போன்ற குற்றத்துக்காக சுல்தானா (33) கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட அனைவர்மீதும் போக்சோ பிரிவிலும் வழக்கு எடுக்கப்பட்டுள்ளது. அந்த விடுதியில் தங்கியிருந்த வேறு பெண்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வேறு பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டிருந்ததா என்பது பற்றியும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.