ஹாஸ்டல்கள் மற்றும் பேயிங் கெஸ்ட்ஸ் என கூறப்படும் PG-களின் வாடகை கட்டணத்துடன் 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் கீழ் செயல்படும் அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான இரண்டு தனித்தனி வழக்குகளில் தங்கும் விடுதிகள் குடியிருப்புகளுக்கு நிகரானவை அல்ல என்றும், எனவே சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படாது என்றும் அட்வான்ஸ் ரூலிங் ஆணையத்தின் (ஏஏஆர்) பெங்களூரு பெஞ்ச் தெரிவித்துள்ளது.
265 கேள்விகள்… தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தத்துக்கான டெண்டர் திடீர் ரத்து!
தனித்தனி சமையல் அறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான அமைப்பில் உள்ள விடுதிகள் குடியிருப்பு வரிசையில் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி வரி விலக்கு விடுதிகள் மற்றும் பிஜிகளுக்கு பொருந்தது என்றும் அட்வான்ஸ் ரூலிங் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தினசரி 1000 ரூபாய்க்கு கீழ் வாடகை கட்டணத்திற்கு இருந்த வரி விலக்கு கடந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது என்றும் அட்வான்ஸ் ரூலிங் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஹாஸ்டல்கள் மற்றும் பிஜிக்களின் கட்டணம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அபாய அளவை தாண்டிய கோதாவரி… கொட்டும் கனமழை.. பீதியில் மக்கள்!
ஹாஸ்டல்கள் மற்றும் பிஜிக்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்களே அதிகம் தங்கியுள்ளனர். இந்நிலையில் இவற்றுக்கான வாடகை கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படுவது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.