சென்னை: நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள விதவிதமான புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த இவருக்கு படவாய்ப்பு குவிந்து வருவதால், மீண்டும் பழைய பாமுக்கு மாறி உள்ளார்.
நடிகை அமலா பால்: சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நடிகையாக இருக்கிறார் நடிகை அமலா பால். இவர் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார்.
சர்ச்சையில் சிக்கிய நடிகை: விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பாலுக்கு,ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையாததால், மன அழுத்தத்தில் இருந்த இவர், நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி ஆட்டம் பாட்டம் வரம்பு மீறி நடந்து கொண்டு பெயரை கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து படங்கள் இல்லாததால்,கேடாவர் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவுக்கு பாராட்டை பெற்றது.
ஆடு ஜீவிதம்: அந்த படத்திற்கு பின் அவருக்கு ஓரளவு படவாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற பிரித்விராஜ் மனைவியாக நடித்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், லிப் லாக் காட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலா பால், நிர்வாணமாகவே நடித்துவிட்டேன் இதெல்லாம் ஒரு விஷயமே என கூலாக பதில் அளித்து இருந்தார்.
மீண்டும் தனுஷுடன்: அமலா பால் தற்போது தனுஷ் இயக்கும் D 50 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பமதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள D 50 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவி ரிட்டன்ஸ்: கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாத அமலா பால், தற்போது மீண்டும் இணையத்தில் விதவிதமான போட்டோவை அப்லோடு செய்துள்ளார். அந்த போட்டோவில் சிவப்பு நிற உடையில், தலைவிரி கோலமாக இருக்கும் அமலா பால் போட்டோவை பார்த்த ரசிகர்கள் தலைவி ரிட்டன்ஸ் என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.