சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது நடிகர் ரஜினிகாந்த் கோபமாக இருக்கிறார் என்றும் அவரது முகத்தில் முழிக்க கூடாது என்பதற்காகத்தான் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு மோசமான வதந்தியை பரப்பி இருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினிகாந்த் செய்துள்ள செயல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார் ரஜினிகாந்த் என சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
பயில்வான் ரங்கநாதன் உருட்டு: நடிகைகள் குறித்து அவதூறான கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வரும் பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்து ஏகப்பட்ட அந்தரங்க கிசுகிசுக்களையும் சொல்லி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு செல்லும் போது ஏன் மகள் ஐஸ்வர்யாவை உடன் அழைத்துச் செல்லவில்லை என்கிற கேள்வியை எழுப்பி அவர் மீது ரஜினிக்கு கோபம் என்றும் அதனால் தான் அவரை விட்டு விட்டுச் சென்று விட்டார் என்றும் கூறியிருந்தார்.
உதவி இயக்குநருடன் காதல் என்று: மேலும், நடிகர் தனுஷை பிரிந்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் உதவி இயக்குநரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அப்பா ரஜினிகாந்திடம் சொன்னது தான் அவரை கோபத்தில் ஆழ்த்தியது என்றும் அதன் காரணமாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு விட்டு கிளம்பினார் என்றும் உருட்டி இருந்தார்.
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதனின் கிசுகிசுவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் செய்துள்ள சிறப்பான சம்பவம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்பாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த நிலையில், தனது அப்பா ரஜினிகாந்த் உடன் மகள் ஐஸ்வர்யா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னை பற்றி சுற்றிக் கொண்டிருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தீவிரமாக உழைத்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.