பெங்களூரு : பெங்களூரில் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக ‘கண் வெண்படல அழற்சி’ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடம் காணப்படுவதால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் ஈரப்பதம், குளிரும் அதிகரித்துள்ளது.
இதனால் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ‘கண் வெண்படல அழற்சி’ பாதிப்பு தோன்றியுள்ளது. இந்நோய் குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. கருவிழியை சுற்றி சிவப்பாக தோன்றும்.
இந்த பாதிப்பு அடைந்தோருக்கு இயற்கையாகவே குணமாகும். ஆனாலும், மருத்துவமனை பரிசோதனை பெறுவது அவசியம்.
இது குறித்து நாராயணா நேத்ராலயா மருத்துவமனை தலைவர் டாக்டர் ரோஹித் ெஷட்டி கூறியதாவது:
எங்களின் நான்கு மருத்துவமனைகளிலும் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர், ‘வெண்படல சுழற்சி’க்கு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 35 – 40 சதவீதம் பேர் குழந்தைகள். இந்நோய் குணமாக, ஆறு மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம்.
ஒவ்வாமை, ஆஸ்துமா, வறண்ட கண்கள் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிபவர்களுக்கு இந்நோய் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இது பரவாமல் இருக்க கைகளை கழுவ வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement