கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதலாக உள்ளது. இந்நிலையில் வெளியான ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் விஜய்யை குத்திக்காட்டுவது போன்று இருப்பதாக பேச்சு கிளம்பியது.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தன் குட்டிக்கதை மூலம் பதில் அளிப்பார் ரஜினி என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்றே குட்டிக்கதை சொன்னார் ரஜினி.
Rajinikanth:ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: குட்டிக் கதையில் குட்டு வைக்கப் போகும் ரஜினி?
அந்த குட்டிக்கதை விஜய்க்கு தான் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. நம் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும் என்றார்.
மேலும் கழுகை பார்த்து காக்கா சீண்டிக் கொண்டே இருக்கும். கழுகை பார்த்து நாமும் உயரமாக பறக்க வேண்டும் என காக்கா நினைக்கும். ஆனால் காக்காவால் உயரமாக பறக்க முடியாது என்றார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
குரைக்கும் நாய், சீண்டும் காக்கா என ரஜினி பொதுவாகத் தான் கூறினார். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக சீண்டும் விஜய்யை தான் காக்கா என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் என சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
இது தொடர்பாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு விஜய்யிடம் கேட்க அவர் வர மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நல்ல வேளை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வரவில்லை. நேரில் வந்து இதை எல்லாம் கேட்டிருந்தால் மோசமாக இருந்திருக்கும் என்கிறார் சினிமா ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து மீண்டும் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜெயிலர் விழாவில் ரஜினி தன்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு இசையமைப்பாளர் அனிருத் கூறியிருப்பதாவது, லவ் ஃபாரெவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தெரிவித்துள்ளார்.
ரஜினி இப்படி பொசுக்குனு நாய், காக்கானு சொல்லுவார் என எதிர்பார்க்கவில்லை. தேவையில்லாமல் அவரை சீண்டினால் இப்படித் தான் ஆகும் என்பதை காட்டிவிட்டார் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
இதற்கிடையே தனுஷ் அன்றே சரியாக சொன்னார் என காலா இசை வெளியீட்டு விழா வீடியோவை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
Dhanush: தலைவர் மீது என்ன ஒரு மரியாதை: தனுஷின் கழுத்தை பார்த்து நெகிழும் ரஜினி ரசிகர்கள்
காலா விழாவில் தனுஷ் கூறியதாவது,
பிரபலமாக இரண்டு வழி இருக்கிறது. ஒன்னு, கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்து, சாதித்து முன்னுக்கு வந்து உச்சத்தில் நிற்கிறது. இன்னொன்னு அப்படி உச்சத்துல இருக்கிறவங்கள அட்டாக் பண்ணி பேசுறது என்றார்.
அந்த வீடியோவை தனுஷ் ரசிகர்களும் ஷேர் செய்து, யாரென்று தெரிகிறதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையே ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது என கமல் ஹாசன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.