ISROs PSLV, C56 rocket successfully launched | இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இன்று (ஜூலை 30) காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோளை ராக்கெட் சுமந்து சென்றது. இது தவிர மேலும் 7 செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன.

பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பினை ஆராயவும் தட்ப வெப்ப மாற்றங்களை ஆராயவும் செயற்கைக்கோள் பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.