தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர் தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்கின்றனர். மறுபக்கம் விஜய் ரசிகர்களோ அடுத்த சூப்பர்ஸ்டார் எங்கள் தளபதி தான் என்கின்றனர். இவ்விரு ரசிகர்களும் மாறி மாறி சண்டையிட சமூகத்தளமே ஒரு போர்க்களம் போல காட்சியளிக்கின்றது.
இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் பாடல் அமைந்தது. இப்பாடலின் வரிகள் மறைமுகமாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவோர்களை தாக்கும் வகையில் இருந்ததாக கூறி இதனை சிலர் விவாத பொருளாகிவிட்டனர்.
ரஜினியின் ஜெயிலர்
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது. இதையடுத்து இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு விறுவிறுப்பாக துவங்கியது. அதன்படி ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
Leo: லியோ படத்தின் அடுத்த அப்டேட் இதுதான்..அப்டேட் வெளியாகும் தேதியையும் அறிவித்த தயாரிப்பாளர்..!
இவ்விழாவில் ரஜினி பேசிய விஷயங்கள் அனைத்தும் செம வைரலாகி வருகின்றது. இவ்விழாவில் ரஜினி ஜெயிலர் படம் உருவானதை பற்றியும், இயக்குனர் நெல்சனை பற்றியும் பல விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக ஜெயிலர் படத்தில் காமெடி காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளதாகவும், எதிர்பார்க்காத காட்சிகளில் எல்லாம் நெல்சன் காமெடியை புகுத்தியுள்ளார் என்றும் அவரை பாராட்டினார் ரஜினி.
மேலும் ஜெயிலர் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் ரஜினி கூறினார். இதையடுத்து ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் ஜெயிலர் படத்தின் முன்பதிவு புது சாதனையை நிகழ்த்தியுள்ளது.
முன்பதிவில் சாதனை
அதாவது ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே அதிகபட்சமாக கிட்டத்தட்ட 4000 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைத்தொடர்ந்து படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் முன்பதிவில் ஜெயிலர் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் ரஜினி நிரந்தர சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.