சென்னை: அஜித் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
எஸ்ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான இப்படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முன்னதாக இப்படத்தில் சிம்ரன் கேரக்டரில் மீனா தான் நடிப்பதாக இருந்துள்ளது.
ஆனால், திடீரென வாலி படத்தில் இருந்து நடிகை மீனா விலகிவிட்டதாகவும், அதற்கான காரணம் பற்றியும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாலி படத்தில் இருந்து விலகிய மீனா? ஆரம்ப காலங்களில் அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் வாலி. கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வளர்ந்து கொண்டிருந்த போதே, மிக தைரியமாக ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து மிரள வைத்தார். ஆசை படத்தில் நடித்த போது அதில் உதவி இயக்குநராக வேலை பார்த்த எஸ்ஜே சூர்யாவுடன் அஜித்துக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆசை படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதே வாலி படத்தின் கதையை அஜித்திடம் கூறியுள்ளார் எஸ்ஜே சூர்யா. அவரும் கண்டிப்பாக பண்ணலாம் என சொல்ல, அப்படி உருவானது தான் வாலி திரைப்படமாம். அந்நேரம் ஆனந்த பூங்காற்றே படத்திலும் அஜித் நடித்து வந்துள்ளார். ராஜ்கபூர் இயக்கிய அந்தப் படத்தில் கார்த்திக், மீனா ஆகியோருடன் அஜித்தும் லீட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், வாலி படத்திலும் அஜித் ஜோடியாக மீனாவை நடிக்க வைக்கலாம் என எஸ்ஜே சூர்யா முடிவு செய்திருந்தாராம். அஜித் மூலமாகவே வாலி படத்தின் கதையையும் மீனாவிடம் கூறியுள்ளார் எஸ்ஜே சூர்யா. கதையே கேட்டு ரொம்பவே இம்ப்ரஸ்ஸான மீனா, வாலி படத்தில் நடிப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், சீன் பேப்பர் ஸ்கிரிப்ட் வாங்கி பார்க்கும் போது அதில், சில நெருக்கமான படுக்கையறை காட்சிகள் இருப்பது அவருக்கு தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.
அதன்பின்னர் தான் வாலி படத்தில் மீனா விலகியவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தான் சிம்ரனை ப்ரியா என்ற கேரக்டரில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார் எஸ்ஜே சூர்யா. அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிம்ரனின் கேரியரில் வாலி திரைப்படம் மிக சிறப்பான அடையாளத்தை கொடுத்தது.
அஜித், சிம்ரன், எஸ்ஜே சூர்யா மட்டுமில்லாமல், செகண்ட் ஹீரோயினாக நடித்த ஜோதிகாவும் வாலி படத்தில் கவனிக்கப்பட்டார். ஜோதிகாவும் முன்னணி நடிகையாக வலம் வந்ததோடு, இறுதியாக தற்போது சூர்யாவையும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதேநேரம் வாலி படத்தில் இருந்து மீனா விலக, படுக்கையறை காட்சிகள் தான் காரணமா என்பது குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.