Nayanthara: முடியாதுனு சொல்லும் நயன்தாராவை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரொமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே இந்த பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுவார்.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
பட ப்ரொமோஷன்களில் தான் கலந்து கொண்டால் அந்த படம் ஓடாது என்று நினைக்கிறாராம் நயன்தாரா. தன்னை நம்பி பணம் போட்ட யாருக்கும் எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்வது இல்லை என்று கூறப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தனியார் கல்லூரி ஒன்றில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் விஷால்.

நயன்தாரா தன் பட ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டேன் என்கிறாரே என விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

பட ப்ரொமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நயன்தாராவின் தனிப்பட்ட உரிமை. அதெல்லாம் முடியாது, நீங்கள் கண்டிப்பாக வந்து தான் ஆகணும் என அவரை கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் என்பது சமூக சேவை ஆகும். மக்களுக்கு சேவை செய்வதே அரசியல். அதை வியாபாரமாக பார்க்கக் கூடாது.

மக்கள் சேவை என்கிற வகையில் பார்த்தால் நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன். அதனால் இனி தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று இல்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர் அரசியல்வாதியாவதில் தவறு இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு தாராளமாக வரலாம் என்றார்.

Dhanush:நாய், காக்கா என்ற ரஜினி: அன்றே சரியாக சொன்ன தனுஷ் எனும் தலைவர் ரசிகர்கள்

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்குவதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் விஜய் புதுக்கட்சி துவங்குகிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படி அவர் கட்சி துவங்கினால் அதில் விஷால் சேர்வார் என்றும் பேசப்படுகிறது.

நயன்தாரா தற்போது ஜவான் படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கிறார். அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

பாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்தால் அதை பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஹீரோவும், ஹீரோயினும் கலந்து கொள்வார்கள். ஸ்பெஷல் போட்டோஷூட்டுகளும் நடத்துவார்கள். இந்நிலையில் ஜவான் விளம்பர நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஜவான் படத்தில் நடித்ததுடன், தயாரிக்கவும் செய்திருக்கும் ஷாருக்கான் மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் நயன்தாரா. நயன் ஒரு அருமையான மனுஷி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என பெருமையாக பேசி வருகிறார் ஷாருக்கான்.

தன் மீது மரியாதை வைத்திருக்கும் ஷாருக்கானுக்காக ஜவான் படத்தை நயன்தாரா விளம்பரம் செய்வாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜவானில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜவான் ட்ரெய்லரில் நயன்தாராவை துப்பாக்கியுடன் பார்த்த தமிழ் ரசிகர்கள் அசந்து போனார்கள். மேலும் நயன்தாராவுக்காக வெளியிடப்பட்ட போஸ்டரிலும் கெத்து காட்டியிருந்தார் லேடி சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.