நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து. அந்த விழாவில் ஜெயிலர் பட வில்லன் தேர்வு குறித்து பேசினார் ரஜினிகாந்த்.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
அவர் கூறியதாவது,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் ஜெயிலரில் வில்லனாக நடிக்கவிருந்தார். சார் அவரிடம் நீங்கள் பேசுங்கள் என நெல்சன் என்னிடம் கூறினார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நானும் நண்பரிடம் பேசினேன். அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் எனக்கு வில்லனாக நடித்தால் நான் அவரை அடிக்க வேண்டியிருக்கும். அது சரிபட்டு வருமா என தோன்றியது. நெல்சனுக்கும் அப்படித் தான் தோன்றியது.
இதை அந்த நண்பரிடம் கூறியபோது, உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் என்றார். இதையடுத்தே அவர் வேண்டாம் என முடிவு செய்து விநாயகனை நடிக்க வைத்திருக்கிறோம் என்றார்.
ரஜினி சொன்ன அந்த நண்பர் உலக நாயகன் கமல் ஹாசன் தான். கமலையும், ரஜினியையும் சேர்த்து திரையில் பார்த்து எத்தனை ஆண்டுகளாகிறது. கமல் மட்டும் ஜெயிலரில் வில்லனாக நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். கமல் மீது கை வைக்க யோசித்து இப்படியொரு அருமையான வாய்ப்பை தவறவிட்டுவிட்டீர்களே தலைவரே என்கிறார்கள் ரசிகர்கள்.
ரஜினியையும், கமலையும் சினிமா நிகழ்ச்சிகளில் தான் சேர்ந்து பார்க்க முடிகிறது. அவர்களை மீண்டும் படத்தில் சேர்ந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தை கமல் ஹாசன் தான் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அந்த படத்தை தயாரிப்பது சரி, கவுரவத் தோற்றத்திலாவது வந்துவிட்டு போங்க ஆண்டவரே. உங்களையும், ரஜினியையும் ஒன்றாக திரையில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Dhanush:நாய், காக்கா என்ற ரஜினி: அன்றே சரியாக சொன்ன தனுஷ் எனும் தலைவர் ரசிகர்கள்
இதற்கிடையே ஜெயிலர் விழாவில் ரஜினி சொன்ன குட்டிக்கதை விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. குரைக்கும் நாய், சீண்டும் காக்கா என ரஜினி சொன்னது விஜய்யை பற்றி தான் என பேசப்படுகிறது.
இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு விழாவில் இதற்கு தளபதி தக்க பதில் அளிப்பார் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா தென் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
அந்த விழாவில் ரஜினியின் குட்டிக்கதைக்கு விஜய் ஒரு குட்டிக்கதை கண்டிப்பாக சொல்வார் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என தளபதி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக ரஜினி, விஜய் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் தான் குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை என தெரிவித்துள்ளார் ரஜினி. அவர் பொதுவாக சொன்னாலும் விஜய்யை தான் குத்திக்காட்டியிருக்கிறார் என தளபதி ரசிகர்கள் கோபமாக விமர்சித்து வருகிறார்கள்.