வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடத்திச் செல்லப்பட்ட 5 வயது பெண் குழந்தை , பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரை உயிருடன் கண்டுபிடிக்க முடியாததற்காக மன்னிப்பு கோரி உள்ளனர்.
கேரளாவின் ஆலுவா என்ற இடத்தில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அவர்களது 5 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம்(ஜூலை 28) காலை நபர் ஒருவர் கடத்தி சென்றார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன்படி போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தி சென்றது பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்பக் ஆலம்(29) என்பது தெரியவந்தது. அன்றைய இரவே, அவனை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். ஆனால், மறுநாள் மதியம் தான் அவன் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்து, படுகொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.
இதனையடுத்து குற்றவாளி கூறிய இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றினர்.
இதனையடுத்து மலையாளத்தில் கேரள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‛ மகளிடம் மன்னிப்பு கோருகிறோம். குழந்தையை, உயிருடன் பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. குழந்தையை கடத்தி சென்ற நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement