SuperStar: ரஜினி சொன்ன தயாரிப்பாளார்களின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்… கொளுத்திப் போட்ட பிரபலம்!

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் ரஜினி.

அவரது இந்த பேச்சு தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனைத் தொடர்ந்து வலைப் பேச்சு பிஸ்மியும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, ரஜினி சொன்ன மாதிரி தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என பிஸ்மி பேசியது வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: கோலிவுட்டே அதிகம் எதிர்பார்த்திருந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடையேறிய ரஜினி, சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் காகம் – பருந்து கதையும் கூறி நானே எப்போதும் சூப்பர் ஸ்டார் என பொடிவைத்து பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து ப்ளூ சட்டை மாறன் ரஜினியை ட்ரோல் செய்து வந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வந்தனர். அதேபோல், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவும் “ஒரே சூப்பர் ஸ்டார் காலமெல்லாம் முடிந்துவிட்டதாக” ட்வீட் போட்டு பற்ற வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வலைப்பேச்சு பிஸ்மியும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து அதிரடியாக பேசியுள்ளார். அதாவது “யார் ஒருவரின் பின்னால் தயாரிப்பாளர்கள் லைனில் நிற்கிறார்களோ அவர் தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி கூறியிருந்தார். அப்படி பார்த்தால் விஜய் தான் சூப்பர் ஸ்டார்” என தடாலடியாகக் கூறியுள்ளார். மேலும், “சூப்பர் ஸ்டார் பட்டத்தில் விருப்பம் இல்லையென கூறும் ரஜினி, இப்போது வந்து காகம், பருந்து கதை சொல்வது ஏன்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், இதுவரை தயாரிப்பாளார்கள் யாரும் ரஜினியை தேடிப் போகவில்லை என்றும், அவர் தான் தயாரிப்பாளர்களை தேடி சென்றதாகவும் கூறியுள்ளார். அதாவது ரஜினியே தேடிச் சென்று ஏஜிஎஸ் நிறுவனத்திடம் ஒரு படம் பண்ணலாம் எனப் பேசிப் பார்த்தார். ஆனால், ரஜினியின் மார்க்கெட் நிலவரத்துக்கு அவர் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாது என அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினி தனக்குத் தானே சூப்பர் ஸ்டார் எனக் கூறிக் கொண்டாலும், விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என மக்களுக்குத் தெரியும் எனவும் பிஸ்மி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ளூ சட்டை மாறனைத் தொடர்ந்து வலைப் பேச்சு பிஸ்மியும் ரஜினியை ட்ரோல் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.