சிட்னி: 98 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்துகிறார் ஒரு பெண்மணி. ஸ்காட்லாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் இசபெல் சதர்லேண்ட் 98. இவர் சிறு வயது முதல் கோல்ப் விளையாடும் பழக்கம் கொண்டவர்.
இன்று 98 வயதை தொட்டாலும் வாரம் 2 முறை கோல்ப் விளையாட அருகில் உள்ள மைதானத்திற்கு கிளம்பி விடுவார். குளிராக இருந்தாலும் அதனை பொருட்படுத்துவதில்லை. ஒரு முறை கோல்ப் ஆடும்போது இவர் 7 கிலோ மீட்டர் நடக்கும் வாய்ப்பு கிடைப்பதாக கணக்கிடப்படுகிறது.
“மைதானத்திற்கு சென்று சக நண்பர்களை சந்தித்து விளையாடி விட்டு வரும் போது ஒருவித உற்சாகம் பிறக்கிறது. வயது ஒரு தடையல்ல, அது ஒரு எண் மட்டும்தான் ” எனக்கு வயதாகி விட்டது என்று நான் நினைத்ததில்லை என்கிறார் பொக்கை வாய் சிரித்திப்படி இசபெல்லா. வெளியே சென்று விளையாடுவதால் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் வரும் நாளும் நம்மை தொடரும் என்கிறார்.
பொதுவாக 55 வயதுக்கு மேல் ஒருவர் நாள்தோறும் அரை மணி நேரம் உடற்பயிற்சிக்கு என ஒதுக்கினால் நோய் நம்மை எட்டி பார்க்காது என்பது மருத்துவர்கள் கூறும் அறிவுரை. இசபெல்லாவின் இந்த உற்சாகம் பிறரை பிரமிக்க வைக்கிறது . கோல்ப் விளையாட்டு பிறந்ததும் அவரது சொந்த ஊரான ஸ்காட்லாந்து தான்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement