Top 10 selling bikes – விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஜூன் 2023

கடந்த ஜூன் 2023 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய பைக் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் 2,38,340 எண்ணிக்கையுடன் இடம்பெற்றுள்ளது.

10 இடங்களில் பிரசத்தி பெற்ற நடுத்தர மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் 27,003 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

TOP 10 Bikes – June 2023

டாப் 10 பைக்குகள் ஜூன்  2023 ஜூன் 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,38,340 2,70,923
2. ஹோண்டா ஷைன் 1,31,920 1,25,947
3. பஜாஜ் பல்சர் 1,07,208 83,723
4. ஹீரோ HF டீலக்ஸ் 89,275 1,13,155
5. ஹீரோ பேஷன் 47,554 18,560
6. பஜாஜ் பிளாட்டினா 36,550 27,732
7. டிவிஎஸ் ரைடர் 34,309 11,718
8. டிவிஎஸ் அப்பாச்சி 28,127 16,737
9. கிளாசிக் 350 27,003 25,425
10. ஹோண்டா யூனிகார்ன் 26,692 79

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ரைடர் மற்றும் அப்பாச்சி என மூன்று மாடல்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் யூனிகார்ன் மற்றும் ஷைன் பைக்குகள் இடம்பெற்றுள்ளன. பேஸன் பிளஸ் வருகைக்கு பின்னர் அபரிதமான விற்பனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் ஹீரோ மோட்டோ கார்ப் ஹெச்எஃப் டீலக்ஸ் விற்பனை சரிவடைந்துள்ளது.

மேலும் படிக்க – விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜூன் 2023

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் ஜூன் 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.