ஜாம்நகர்: குஜராத்தில் சப்தா அணைக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர்.
குஜராத்தில் ஜாம்நகரைச் சேர்ந்த மகேஷ் மாங்க், 42, என்பவரின் குடும்பமும், அவரது அண்டை வீட்டாரின் குடும்பமும் இணைந்து அருகே உள்ள சப்தா அணைக்கு சுற்றுலா சென்றனர்.
அணையை சுற்றி பார்த்த போது, எதிர்பாராதவிதமாக, ஐந்து பேர் நீரில் தவறி விழுந்து மூழ்கினர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், நீண்டநேர தேடுதலுக்கு பின், ஐந்து பேரின் உடல்களை மீட்டனர்.
இறந்தவர்களில் மகேஷ் மாங்க், அவரது மனைவி லீனாபென், 40, இவர்களது மகன் சித்தார்த், 19 மற்றும் அவர்களுடன் வந்த அண்டை வீட்டைச் சேர்ந்த அனிதா தாமா, 40, அவரது மகன் ராகுல், 17, ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement