ஆர்.என்.ரவி இங்க தான் இருக்கணும்… அப்ப தான் அது நடக்கும்… ஸ்டாலின் செஞ்ச பலே சம்பவம்!

சென்னை சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் பேராசிரியர் மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புத்தக வெளியீட்டு விழா, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பேசிய மு.க.ஸ்டாலின், புலவர் நன்னன் குறித்த சிறப்புகளை எடுத்துரைத்ததோடு அரசியல் ரீதியிலான கருத்துகளையும் முன்வைத்தார்.

தமிழகத்தில் ஒரு பெரியார்

அதாவது, கலைஞரின் வாரிசு என்றால் அது நான் மட்டுமல்ல. திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள் தான். இந்த வழித் தோன்றல்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பதைப் போல, விடுதலை இயக்கத்துக்கும் வழித்தோன்றல்கள் இருப்பார்கள். தமிழகத்திற்கு ஒரு பெரியார் இருந்ததை போல, மற்ற மாநிலங்களுக்கு இல்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டும்

எங்களுக்கு ஒரு

, ஒரு திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் வந்திருக்கிறது. சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நமது ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவது நமக்கு ஒரு பிரச்சாரமாக உள்ளது. நான் பல கூட்டங்களில் கூறியிருக்கிறேன். தொடர்ந்து அவரே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமது கொள்கைகளை நாம் வளர்க்க முடியும்.

வாழ்க வசவாளர்கள்

நமது பிரச்சாரத்தை சிறப்பாக செய்யலாம். தினமும் தவறான பாடங்களை நடத்தி கொண்டிருக்கிறார். அவர் பேசி வருவதே நமது கொள்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரம். பேரறிஞர் அண்ணா சொன்னது போல ‘வாழ்க வசவாளர்கள்’ என்று அதைத் தான் இப்போது நான் சொல்ல வேண்டியிருக்கிறது. தந்தை பெரியார் சொன்னது போல ‘எனது எதிரிகள் தான் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள்’.

புலவர் மா.நன்னனின் சிறப்புகள்

அத்தகைய எதிரிகளுக்கு பதில் சொல்ல நன்னனின் எழுத்துகள் அதிகமாக நமக்கு பயன்படும். எப்படி எழுதுவது, எப்படி பேசுவது என்பதை மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும் கற்று கொடுத்துள்ளார் நம்முடைய நன்னன். வாழ்நாள் முழுவதும் தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தார். அதன் அடையாளமாகவே திகழ்ந்தார். தனது குடும்பத்தையையும், கொள்கையையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

புத்தகங்கள் நாட்டுடைமை

தமிழக அரசின் சார்பில் நன்னனுக்கு புகழ் சேர்க்கும் வகையில், அவரது புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பேராசிரியர் மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவர் கி.வீரமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலும், ஜெ.கருணாநிதி, திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு, அமிர்தம், துணை மேயர் மகேஷ் குமார், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் கலி.பூங்குன்றன், நன்னனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.