‘Pattam Pole’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
இந்த இரண்டு படங்களிலும் மாளவிகா முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே வந்திருப்பார். இவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இதைத்தொட்ர்ந்து தற்போது விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். இந்தியிலும் ‘Yudhra’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள மாளவிகா மோகனன், “இனிமேல் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதாக நான் முடிவு செய்துள்ளேன். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, ஏன் 4500 கோடி வசூலிக்க கூடிய படமாக இருந்தாலும் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அப்படத்தில் நான் நடிக்க மாட்டேன். படம் ஓடி வசூலில் சாதனை படைத்தாலும் எனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்தால் யாரும் என்னை நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்!” என்று கூறியுள்ளார்.