ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, அங்கு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அறிவுகளில் குளிக்கவும், […]
