கடல் அட்டைகள் பதப்படுத்தும் நிலையம் ஒன்று கிளிநொச்சி பள்ளிக்குடா பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தவினால் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடல் அட்டைகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படுகின்ற கடல் அட்டைகள் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காhன பதப்படுத்தல் நிலையமாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்…
வடமாகாணத்தில் மீனவ சமூகம் மற்றும் வியாபாரிகள் கடல் அட்டைகளை வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சி குறித்து கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் தான் மகிழ்ச்சியடைவதாகவுதம் தெரிவித்தார்.
மேலும்;, இதனூடாக நாட்டிற்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என்பதுடன், இவ்வாறான பதப்படுத்தல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதனால் தங்களுடைய உற்பத்திகளை அந்நிலையங்களுக்கு நேரடியாகவே வழங்க முடியும். இதனூடாக உற்பத்தியாளர்களின் ஆர்வம் மென்மேலும் அதிகரிக்கும்; என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.