மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் பாட்டிலில் வைத்து விற்கிறீர்கள். அந்த பாட்டிலை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாயை கணக்கு வச்சு திரும்ப ஒப்படைக்கலாம் என்று பெரிய பிளானை ஒர்க் அவுட் செய்து வருகிறீர்கள். அதேமாதிரி ஆவின் பால் விஷயத்தில் செய்ய முடியாதா? இந்த கேள்வியை சமூக ஆர்வலர்களோ, பொதுமக்களோ கேட்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தான் தடாலடியாக கேட்டுள்ளது.
ஆவின் பால் விற்பனைமேலும் இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனையில் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது தொடர்பாக மக்கள் கருத்து கேட்கப்பட்டது.அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்இதையடுத்து தலைநகர் சென்னை தான் சரியாக இருக்கும் என கணக்கு போட்டுள்ளனர். முதலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் செயல்படுத்தி பார்க்க திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு டீலர்கள், பங்குதாரர்கள் ஆகியோரை பொறுத்து படிப்படியாக விரிவுபடுத்த முடிவு செய்திருக்கின்றனர். ஆவின் கண்ணாடி பாட்டில் குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பாட்டிலில் ஆவின் பால்சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கண்ணாடி பாட்டிலில் ஆவின் பாலை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதில் எந்தவித சிரமும் இருக்காது என்று கருதுகிறோம். அதேசமயம் தற்போது பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் கவரிலும் பெரிதாக பிரச்சினை இல்லை. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிடையாது.
முதலீடும், உள்கட்டமைப்பு வசதியும்எந்தவித சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தாது என்று நம்பிக்கை தெரிவித்தார். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பாட்டில்களில் பாலை விற்பனைக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருக்கிறது. இதற்கான முதலீடு. பிளாஸ்டிக் பாக்கெட்களை ஒப்பிடும் போது பாட்டில்களை தயாரித்து, அவற்றை பாதுகாப்பாக விற்பனைக்கு கொண்டு செல்ல போதிய அளவில் முதலீடுகள் தேவை.பேக்கிங் டூ டிஸ்டிரிபூஷன்இதற்காக உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். பேக்கிங் செய்வது வரை ஓகே. அதன்பிறகு ஆவின் பால் பாட்டில்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. அதாவது நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. பால் பாட்டில் வழியில் உடைந்து விட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்பாடுகள் என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது. இதையே தான் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் எழுப்புகிறது.
இட வசதி பிரச்சினைஒரு மளிகை கடையில் உள்ள பிரிட்ஜ் அல்லது கூலரில் பால் பாக்கெட்களாக இருந்தால் 30 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். அதுவே பால் பாட்டில்கள் என்றால் இட நெருக்கடி ஏற்படும். இதனால் பாட்டில்களை பிரிட்ஜ் அல்லது கூலரில் வைப்பதற்கு பதில் வெளியே வைக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் பால் கெட்டுப் போகக் கூடும். இத்தகைய சிக்கல்களை சமாளித்தால் தான் ஆவின் பால் பாட்டில் விற்பனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்கின்றனர்.