‛காவலா' பாட்டுக்கு ‛வைப்' செய்த ரம்யா கிருஷ்ணன்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக., 10ம் தேதி வெளியாக இருக்கிறது. படையப்பா படத்திற்கு பிறகு (பாபாவில் கெஸ்ட் ரோலில் நடித்தது தனி) மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

ஏற்கனவே இந்த படத்தில் தமன்னா நடனமாடும் பாடலாக வெளியாகி உள்ள காவாலா பாடல் பட்டி தொட்டியெஙகும் ஹிட் ஆகியுள்ளது. இதற்கு குழந்தைகள், இளம்பெண்கள், வயதானவர்கள் முதல் பிரபல நடிகைகள் வரை பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வந்த ரம்யா கிருஷ்ணன் விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பாக கேரவனில் தன்னுடன் வந்த இரண்டு பெண்களுடன் சேர்ந்து காவாலா பாடலுக்கு நடனமாடியுள்ளார். குறிப்பாக தமன்னாவின் அந்த பேவரைட் ஹூக் ஸ்டெப்பையும் போட்டு அசத்தியுள்ளார் 52 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.