திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பால் கூட்டுறவு சங்க (KMF) தலைவர் பீமா நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து இந்த ஆண்டு நெய் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. KMF நிறுவனத்தை விட வேறு ஒரு நிறுவனம் குறைந்த விலைக்கு நெய் […]