நீங்கள் விரும்பும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

வாழ்க்கை தணிக்கை (Life Audit) செய்யுங்கள்:

வாழ்க்கை தணிக்கை செய்வது, உங்கள் வாழ்க்கையில் எங்கு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கும், புதிய பயணத்தை தொடங்குவதற்கும் உதவுகிறது.

வாழ்க்கையின் இந்த 8 பகுதிகளில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள்,

ஆரோக்கியம்,

நிதி,

தனிப்பட்ட வளர்ச்சி,

வேலை/தொழில்,

உறவுகள்,

சுய பாதுகாப்பு (Self-care),

குடும்பம்,

நேரம்.

Representational Image

மனநிலையை மாற்றவும்:

உங்கள் மனநிலையே உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு தொனியை அமைக்கிறது. உங்கள் மனநிலையை மாற்றுவது உங்கள் வாழ்க்கையை மாற்றும். நாம் எதை நினைக்கிறோமோ அதை நம்புகிறோம், எதை நம்புகிறோமோ அதையே செயல்படுத்துகிறோம்.

உங்கள் கண்ணோட்டத்தை மாற்றுங்கள் . இனி எந்த நேரத்திலும் எதிர்மறையாக எதுவும் நடந்தால், பாதிக்கப்பட்டவர் போல் உணராமல், நீங்கள் எதைக் கட்டுப்படுத்தலாம் அல்லது மாற்றலாம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்

ஒரு கனவை உருவாக்குங்கள்:

உங்கள் கனவு என்ன? நீங்கள் எந்த இடத்தை உங்கள் வாழ்க்கையில் சென்றடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அந்த பாதையில் பயணத்தை தொடங்குங்கள். குறுகிய கால இலக்குகள், நீண்ட கால இலக்குகள் என நிர்ணயித்து உங்கள் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்குங்கள்.

Representational Image

நிலையான, தினசரி பயிற்சி என்பது நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் ஒவ்வொரு நாளும் தாவரங்களுக்கு சிறிது தண்ணீர் ஊற்றினால், காலப்போக்கில் உங்கள் தோட்டம் மிக பெரிய அளவில் வளர்ந்திருக்கும்.

பேரார்வமும், விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் நம் கனவுகளை நனவாக்க முடியும்.

வெற்றிக்காக உங்கள் சூழலை வடிவமைக்கவும்:

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால், நீங்கள் மட்டும் மாறினால் போதாது உங்கள் சூழலும் மாற்றம் காண வேண்டும். உதாரணமாக நீங்கள் எதிர்மறை சிந்தனை உள்ள, செயலில் இறங்காமல் பேசிகொன்டே இருக்கும் மனிதர்களுடன் நட்பு கொண்டால், நீங்கள் ஒருபோதும் செயலில் இறங்க மாட்டீர்கள். அவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்குள் நீங்களும் சிக்கிக்கொள்வீர்கள்.

ஆனால் நீங்கள் எப்போதும் முன்னேற்றத்தை பற்றி எண்ணுகின்ற, வெற்றியோ தோல்வியோ செயலில் இறங்கும் மனிதர்களுடன் நட்பு கொண்டால் நீங்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. காரணம், இங்கே உங்கள் சூழல் மாறியிருக்கிறது.

Representational Image

புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்:

புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதுதான் உங்கள் வாழ்க்கையை மிக வேகமாக மாற்ற உதவும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்கள் நாளில் ஒரு சில மணிநேரத்தை ஒதுக்குங்கள். ஒரு வருட காலம் நீங்கள் ஒரு திறனை கற்று கொள்ள செலவழித்தால் நீங்கள் எவ்வளவு கற்றிருப்பீர்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்..

புத்தகங்கள், காணொளிகள், podcasts என கற்று கொள்ள இன்று பல வழிகள் உள்ளன. எதுவாக இருந்தாலும் கற்றுக்கொள்வதுடன் நிறுத்தி விடாமல் அதை பயிற்சித்து பாருங்கள்.

Representational Image

இறுதியாக, மாற்றத்தை அனுபவியுங்கள் .. நீங்கள் நினைத்ததுபோல் உங்கள் வாழ்க்கையை மாற்ற உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் மாற்றுங்கள், உங்கள் சூழலை மாற்றுங்கள், திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். இந்த பயணத்தில் நீங்கள் என்றோ முக்கியமான ஒன்று என நினைத்தது இப்போது உங்களுக்கு தேவை இல்லாமல் போகலாம், காரணம் அதை விட முக்கியமான ஒன்றை தேடி நீங்க பயணிக்கிறீர்கள்.

நரேந்திரன் பாலகிருஷ்ணன் 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.