சென்னை: பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துகளுக்கான பட்டாவை வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த நிலமானது, நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்பது தெரியவந்தது. அதன் காரணமாக கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க […]