வளரும் நடிகரை விமர்சித்த 'பாகுபலி' தயாரிப்பாளர்
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடித்து பெரும் சாதனை படைத்த படம் 'பாகுபலி'. அப்படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா பதிவிட்ட டுவீட் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“வெற்றியை கவனத்துடன் கையாள வேண்டும். சமீபத்தில் வளரும் நடிகர் ஒருவரிடம் அறிமுக இயக்குனர் ஒரு கதையைச் சொல்லச் சென்ற போது அந்த நடிகர் குறைந்தபட்ச மரியாதையைக் கூடத் தரவில்லை. அவரது வாழ்க்கையை வளர்க்க இந்த குணம் உதவாது என்பதை அவர் விரைவில் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
யார் அந்த நடிகர் என்று அவர் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை. தெலுங்கு திரையுலகத்தில் சமீப காலத்தில் சில வளரும் நடிகர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தந்துள்ளனர். அவர்களில் யாரை ஷோபு சொல்கிறார் என ரசிகர்கள் அவரவர் யூகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
'பாகுபலி' தயாரிப்பாளரையே இப்படி கோவப்பட வைத்த அந்த நடிகர் யாராக இருக்கும் ?.