வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மேஜஸ் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சியாட்டல் அணியும், மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) நியூயார்க் அணியும் மோதியதில், எம்.ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதில் எம்.ஐ வீரர் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 137 ரன்கள் விளாசினார்.
இந்தியாவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பின்பற்றி உலகம் முழுவதுமே பல பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி) என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டது. ஐ.பி.எல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள்தான் பெரும்பாலும் மேஜர் லீகிலும் அணிகளை வைத்திருக்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரின் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்தத் தொடரின் பைனலில், சியாட்டல் அணியும், மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) நியூயார்க் அணியும் மோதின.
புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தையே பிடித்திருந்த எம்.ஐ நியூயார்க் அணி, எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் அணியையும், சேலஞ்சர் சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
பைனலில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் எம்.ஐ அணி சியாட்டல் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய சியாட்டல் அணி 183 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எம்.ஐ அணி 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து முதல் ‘சாம்பியன்’ ஆனது. அதற்கு ஒரே காரணம் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மட்டும்தான்.
நிக்கோலஸ் 55 பந்தில் 10 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் 137 ரன்கள் விளாசினார். பூஜ்ஜியத்திற்கு ஒரு வி களமிறங்கி சூறாவளியாக சுழன்ற பூரன், மும்பை அணியை எளிதில் கரைசேர்க்க உதவினார். இதன்மூலம் அமெரிக்க கிரிக்கெட் தொடரிலும் மும்பை அணி, தன் முத்திரையை பதித்துள்ளது. இந்திய பிரிமியர் தொடரில் 5 முறை கோப்பை வென்ற அந்த அணி, அமெரிக்காவிலும் சாதித்தது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement