சென்னை: நடிகர் அஜித்குமார் கடந்த 1992ம் ஆண்டில் பிரேம புத்தகம் என்ற தெலுங்குப்படத்தில் நடித்து சினிமாவில் தன்னுடைய அறிமுகத்தை செய்தார். தொடர்ந்து தமிழில் அமராவதி என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். இந்தப் படம் அந்த அளவிற்கு கைக்கொடுக்கவில்லை. அடுத்ததாக 1995ம் ஆண்டில் வெளியான ஆசை படம் தமிழ் சினிமாவில் அஜித்தை அனைவரும் திரும்பிப் பார்க்க செய்தது.
