Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரள விடும் ராகவா லாரன்ஸ்: பராக்.. பராக்..!

ராகவா லாரன்ஸில் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. பி. வாசு இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படம் குறித்த அதிரடியான அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை படைத்த படம் ‘சந்திரமுகி’. இந்தப்படத்தில் இடம்பெற்ற ரஜினியின் ஸ்டைலான மாஸ் நடிப்பு, சந்திரமுகியாக மாறி மிரள வைத்த ஜோதிகா, வைகைப்புயல் வடிவேலுவின் சரவெடி காமெடி உள்ளிட்டவை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. பி. வாசு இயக்கத்தில் ரிலீசான ‘சந்திரமுகி’ படம் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதன் இரண்டாம் பாகம் துவங்குவது குறித்த பேச்சுக்கள் பல காலமாக நடந்து வந்த நிலையில், அண்மையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ படம் துவங்கியது. தமிழ் சினிமாவில் டான்சராக அறிமுகமாகி, நடிகராக கலக்கி, இயக்குனராகவும் பல வெற்றி படங்களை கொடுத்த லாரன்ஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சந்திரமுகி 2’ படம் உருவாகி வருகிறது.

ஏற்கனவே முனி, காஞ்சனா சீரிஸ் பேய் படங்களில் ஹிட்டடித்த லாரன்ஸ் தற்போது மீண்டும் த்ரில்லர் ஜானரில் நடித்து வருகிறார். பி. வாசுவின் 65 வது படமாக உருவாகி வரும் இதில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

சும்மா தெறிக்கும்.. ‘தளபதி 68’ குறித்து வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை: சம்பவம் தான் போல.!

இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கான மிரட்டலான லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லாரன்ஸ், ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த மாஸான போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

‘சந்திரமுகி 2’ படத்திற்கு இசையமைக்கும் கீரவாணி, படத்தில் வரும் கதாபாத்திரங்கள் தன்னை மரண பயத்தில் ஆழ்த்தியதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. மேலும், ‘சந்திரமுகி 2’ படம் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nayanthara: நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடில வைச்சுதான் காதுகுத்து: பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.