Citroen C3 Aircross Mileage – சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மைலேஜ், புக்கிங் விபரம் வெளியானது

செப்டம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. ஒற்றை என்ஜினை பெற்றுள்ள இந்த மாடல் கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் முன்பதிவு சி3 ஏர்கிராஸ் காருக்கு துவங்கப்பட்டு, டெலிவரி அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளது. பண்டிகை காலத்துக்கு முன்பாக டெலிவரி வழங்குவதனை சிட்ரோன் உறுதிப்படுத்தியுள்ளது.

Citroen C3 Fuel Efficiency

5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

C3 ஏர்கிராஸ் காரின் பரிமாணங்கள் 4300mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1654mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருப்பதுடன், வேறு எந்த போட்டியாளர்களிடமும் இல்லாத 200mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட காராகும்.

5 இருக்கை பெற்ற காரின் பூட் கொள்ளளவு 444 லிட்டர் மற்றும் 7 இருக்கை மாடலில் மூன்றாவது வரிசை இருக்கையை முழுமையாக நீக்க முடியும் என்பதனால் அதிகபட்சமாக 511 லிட்டர் பெற்றிருக்கும். 6 விதமான டூயல் டோன் நிறங்கள் மற்றும் 4 விதமான ஒற்றை நிறங்கள் என 10 நிறங்களுடன் கிரே மற்றும் பிரான்ஸ் என இரண்டு விதமான நிறத்தை பெற்றுள்ளது.

10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.

சி பிரிவில் உள்ள போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.