வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஹரியானாவில் பணமோசடி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., தரம் சிங்சோக்கருக்கு சொந்தமான 11 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள சமல்கா தொகுதியைச் சேர்ந்த காங்., – எம்.எல்.ஏ., தரம் சிங் சோக்கர், 59, தன் மகன்களுடன் சேர்ந்து இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார்.
குருகிராம் அருகே மலிவு விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாகக் கூறி 1,500 பேரிடம் 360 கோடி ரூபாய் வரை தரம்சிங் மற்றும் அவரது மகன்கள் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், உறுதியளித்தபடி வீடுகளை தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள், தரம்சிங் சோக்கர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், அவருக்கு சொந்தமான சமல்கா, குருகிராம், டில்லி உட்பட 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் நான்கு சொகுசு கார்கள், ரூ.14.5 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.14.5 லட்சம் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement