Jailer: ஜெயிலர் படத்தின் வசூலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்..சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலையா ?

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதன் காரணமாக ஜெயிலர் தற்போது ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. ரஜினி, நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் என அனைவரும் படத்தை பற்றி பல விஷயங்களை பேசினர்.

அதிகாலை காட்சிகள் இல்லை

அண்ணாத்த படத்திற்கு பிறகு சரியான கதைகள் அமையவில்லை என்றும், அந்த சமயத்தில் தான் நெல்சனின் ஜெயிலர் கதையை கேட்டு மிகவும் பிடித்துப்போய் இப்படத்தில் நடித்தேன் என்றும் ரஜினி கூறினார். மேலும் நெல்சன் பேசியபோது, என் படத்திற்கு நடக்கும் முதல் இசை வெளியீட்டு விழா இதுதான் என மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.

Jailer: ஜெயிலர் யாரையும் ஏமாற்றாது..ஏனென்றால்..அடித்து கூறும் வசந்த் ரவி..!

மேலும் இசை வெளியீட்டு விழாவில் என்ட்ரி கொடுத்த ரஜினி நெல்சனை பார்த்ததும் கட்டி அணைத்துக்கொண்டார். அந்த அணைப்பை பார்த்தாலே ரஜினிக்கு ஜெயிலர் படத்தின் மீது முழு திருப்தி ஏற்பட்டுள்ளது என நமக்கு தெரிகின்றது. எனவே இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெற்று ரஜினியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சோலோவாக வெளியாக இருப்பதால் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு விஷயம் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

அதாவது ஜெயிலர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை என்றும், காலை 9 மணிக்கே ஜெயிலர் படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என கருதப்படுகின்றது. தமிழ்நாடு முழுவதும் அதிகாலை காட்சிகள் ரத்தானால் ரஜினி போன்று ஒரு உச்ச நட்சத்திரத்தின் படத்திற்கு மிகவும் பின்னடைவாக போய்விடும்.

ஏமாற்றத்தில் ரசிகர்கள்

எனவே இப்படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என ரஜினியின் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். தற்போது இருக்கும் நிலைமையில் முதல் நாள் வசூல் சாதனை தான் பெரிய விஷயமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு முதல் நாள் வசூல் சாதனை பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இவ்வாறு இருக்கையில் ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சி இல்லை என்ற தகவல் ரஜினி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.