ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் படத்திற்கு எதிர்பார்த்ததை விட ஹைப் இருந்து வருகின்றது. இப்படம் துவங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது பலமடங்கு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் தான்.
பொதுவாக நெல்சனின் படங்களின் ப்ரோமோஷன்கள் முற்றிலும் வித்யாசமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல ஜெயிலர் படத்திற்கும் தன் வழக்கமான ஸ்டைலில் ப்ரோமோஷனை துவங்கி வைத்தார் நெல்சன். காவாலா பாடல் வெளியீட்டை ஒரு ப்ரோமோவின் மூலம் வெளியிட்டு ரசிகர்களை மேலும் ஒரு முறை ஈர்த்தார் நெல்சன்.
ஜெயிலர் ஏமாற்றாது
அதன்பிறகு இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வெளியான பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
Leo: லியோ படத்தின் அடுத்த அப்டேட் இதுதான்..அப்டேட் வெளியாகும் தேதியையும் அறிவித்த தயாரிப்பாளர்..!
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றதால் ரசிகர்கள் இவ்விழாவை காண ஆவலாக இருந்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினி பல விஷயங்களை பற்றி பேசினார். இதைத்தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
அநேகமாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்த வசந்த் ரவி ஒரு பேட்டியில் ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவங்களை பற்றியும், ஜெயிலர் படத்தைப்பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது, நான் ஜெயிலர் படத்தில் நடித்ததற்கு மிகமுக்கிய காரணம் சூப்பர்ஸ்டார் தான். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஜெயிலர் திரைப்படம் இதுவரை வெளியாக ரஜினி படங்களில் இருந்து வித்யாசமான ஒரு படமாக இருக்கும். நெல்சனின் டார்க் காமெடி தமிழ் சினிமாவில் புதுமையை உண்டாக்கும். மொத்தத்தில் ஜெயிலர் திரைப்படம் யாரையும் ஏமாற்றாது என பேசினார் வசந்த் ரவி.
நெல்சனின் டார்க் காமெடி
ஆரம்பத்தில் இருந்தே ஜெயிலர் படம் ரஜினியின் படங்களில் இருந்து வித்யாசமாக இருக்கும் என தகவல்கள் வருவதால் இதுவே படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் மூலம் வித்யாசமான ரஜினியை காண ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலாக இருக்கின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் வசந்த் ரவி ரஜினியின் மகனாக நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. தன் மகனை வில்லன்களிடம் இருந்து ரஜினி எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் ஒன் லைன் என்றும் சொல்லப்படுகின்றது. எனவே படம் வெளியான பின்னர் தான் இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.