நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பாக கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் ஆடியோ லான்ச்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் ‘ஜெயிலர்’. கோலிவுட் சினிமா வியக்கும் அளவிற்கு இந்தப்படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் ரஜினிக்கு கோரிக்கை ஒன்று பறந்துள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ஜெயிலரில் நடித்துள்ளார் ரஜினி. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் தலைவர் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சனுடன் ரஜினி முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ரஜினியின் மாஸ் ஸ்பீச்’ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை இந்தப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடந்தது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினர் மற்றும் ‘ஜெயிலர்’ படக்குழுவினரை சார்ந்த பலரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாஸ் ஸ்பீச் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.
ரஜினிக்கு கோரிக்கைஇவ்விழாவில் நடிகர் ரஜினி பேசியது குறித்து தான் சோஷியல் மீடியாக்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பாக ரஜினிக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ படத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்ய நடவடிக்கை வேண்டும் என ரஜினியிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆக்ஷனில் மிரட்டும் ஜெயிலர்’ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட மூன்று மொழிகளை சார்ந்த சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும், இந்தப்படத்தை தனது முந்தைய படங்களை விட ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 வெளியாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.