இந்தியாவின் பிரசத்தி பெற்ற லைஃப் ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யூவி மாடலான மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் கான்செப்ட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஸ்கார்பியோ பிக்கப் அறிமுகத்தின் போது காட்சிப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் 5 கதவுகளை பெற்ற தார் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளதால், தார் அடிப்படையில் எலக்ட்ரிக் காரை தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
Mahindra Thar EV
தென் ஆப்பிராக்காவில் உள்ள கேப் டவுனில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் புதிய ஸ்கார்பியோ என் பிக்கப் டிரக்கினை வெளியிட உள்ள நிலையில், இதே அரங்கில் எலக்ட்ரிக் வெர்ஷனாக தார் எஸ்யூவி மாடலை வெளியிட உள்ளது.
ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், தார் தொடர்ந்து ஆஃப்-ரோடு தன்மைக்கு ஏற்ற கான்செப்ட் EV 4X4 கொண்டிருக்கும். இருப்பினும் சுவாரஸ்யமாக, இரட்டை மோட்டார் ஏற்பாட்டைப் பயன்படுத்தும் பல 4WD EV மாடலை போலல்லாமல், தார் கான்செப்ட் EV குவாட் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றபடி, தார் எஸ்யூவி வடிவமைக்கப்பட உள்ள பிளாட்ஃபாரத்தில் எந்த மாதிரியான அம்சங்கள் பயன்படுத்தப்படும் மற்றும் இதன் பவர்டிரையன், ரேஞ்சு, எலக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட விபரங்கள் உற்பத்திக்கு செல்லும் பொழுது உறுதிப்படுத்தப்படலாம். இது தொடர்பான முழுமையான விபரம் ஆகஸ்ட் 15-ல் கிடைக்கும்.