தென்னிந்திய சினிமாவின் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த ஜோடிகள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தை ஆனார்கள். அவ்வப்போது தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சந்தானம் நயன் – விக்கியின் இரட்டை குழந்தைகள் குறித்து பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து காதலிக்க ஆரம்பித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்தாண்டு ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, டிடி, இயக்குனர் அட்லீ மற்றும் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
திருமணமான நான்கே மாதத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக இந்த தம்பதியினர் குழந்தை பெற்று கொண்டனர். இந்த விஷயம் இணையத்தில் பேசு பொருளானதுடன், ஒருசில சர்ச்சைகளையும் கிளப்பியது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அவ்வப்போது தங்களின் இரட்டை குழந்தைகளுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்திற்கான புரமோஷனில் கலந்துக்கொண்ட நடிகர் சந்தானம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leo:பயங்கரம்.. வெறித்தனமான லுக்கில் சஞ்சய் தத்: மிரட்டலாய் வெளியான ‘லியோ’ கிளிம்ப்ஸ்.!
அதில், ‘வல்லவன்’ படத்திலிருந்து எனக்கு நயன்தாரா பழக்கம். என்னை அண்ணன் சொல்லி தான் கூப்பிடுவாங்க. நானும் தங்கச்சி தான் கூப்பிடுவேன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருந்த படத்திற்கு எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.
எனக்காக பயங்கரமா சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி இருந்தாங்க. நான் போனப்ப ரெண்டு குழந்தைங்க கிட்ட, மாமா வந்து இருக்காங்க பாருன்னு சொன்னாங்க. நானும் என்னம்மா என் மடில வைச்சு தான் காது குத்துவியான்னு கேட்டேன். என்னோட சினிமாத்துறைல உள்ள தங்கச்சி அவுங்க. தாய் மாமன் சீர் எல்லாம் செய்யணும் என நயன்தாரா குறித்து கலகலப்பாக பேசியுள்ளார் சந்தானம். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சும்மா தெறிக்கும்.. ‘தளபதி 68’ குறித்து வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை: சம்பவம் தான் போல.!