பெஷாவர், பாகிஸ்தானில் பொதுக் கூட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்ட நிலையில், இதற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பே காரணம் என தெரியவந்து உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜவுர் மாவட்டத்தில் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலேமா இஸ்லாம் பசல் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, மேடையின் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த கொடூர சதியில் 46 பேர் பலியாகினர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனித வெடிகுண்டு நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலே காரணம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி நசீர் கான் கூறுகையில், “தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement