Thalapathy Vijay: சுறா படம் ஓடாது என தனக்கு ஏற்கனவே தெரியும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் தமன்னா.
சுறாஎஸ். பி. ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சுறா படம் கடந்த 2010ம் ஆணடு வெளியானது. படம் பார்த்த விஜய் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். சுறா படம் தோல்வி அடைந்தது. அந்த படத்தில் ஏன் தளபதி நடித்தார் என விஜய் ரசிகர்கள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சுறா படத்தின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார் தமன்னா.கேப்டன் மில்லர்கேப்டன் மில்லர் தமிழ் சினிமாவின் பாகுபலிதமன்னாஅண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமன்னா கூறியதாவது, சுறா படம் பிரபலமானது. அந்த பட பாடல்கள் வெற்றி பெற்றன. எனக்கு அந்த படம் பிடிக்கும் ஆனால் சில காட்சிகளில் நான் நன்றாக நடிக்கவில்லை என தோன்றியது. சுறா படத்தில் நடிக்கும்போதே அது ஓடாது என்று எனக்கு தெரியும். இந்த படம் வேலைக்கு ஆகாது என எனக்கு அப்பொழுது தோன்றியது என்றார்.
ரசிகர்கள்Tamannaah: தமன்னா அணிந்திருப்பது சேலை தாங்க, நம்புங்கபடம் ஓடாது என்று தோன்றினாலும் கமிட்மென்ட்டுக்காக நடித்ததாக தமன்னா கூறியிருக்கிறார். சுறா ஓடாது என தனக்கு தெரியும் என்று தமன்னா கூறியதை கேட்ட விஜய் ரசிகர்களோ, இந்த படம் வேண்டாம்னு அப்போதே தளபதியிடம் கூறியிருக்கலாமே. அவரும் நடித்திருக்க மாட்டாரே என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சுறா படத்தில் தற்கொலை செய்வதற்கு முன்பு மேக்கப் போட்டுவிட்டு தமன்னா சென்ற காட்சியை இன்றும் யாரும் மறக்கவில்லை.
காவாலாதமன்னா தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் படங்கள், வெப்தொடர்கள் என பிசியாகி இருக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் வரும் காவாலா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார் தமன்னா. காவாலா பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது.
சூப்பர் ஹிட்தமன்னா போட்ட ஸ்டெப்ஸை பார்த்துவிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், ரசிகைகள் என பலரும் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன். அவரும் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். ரம்யாவின் டான்ஸ் சூப்பராக இருக்கிறது என்றே கூற வேண்டும்.
விடாமுயற்சிஜெயிலர் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் தமன்னாவை தேடி புதுப்பட வாய்ப்பு வந்திருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். முன்னதாக த்ரிஷா தான் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தமன்னாவின் பெயர் அடிபடுகிறது.
Vidaa Muyarchi Update: விடாமுயற்சி பற்றி இந்த அப்டேட் தான் கிடைச்சிருக்கு: சாரி அஜித் ரசிகாஸ்
வைர மோதிரம்தமன்னாவின் கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தமன்னாவுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள உலகின் ஐந்தாவது பெரிய வைரம் கொண்ட மோதிரத்தை பரிசாக அளித்தார் என தகவல் வெளியானது. அதை பார்த்த தமன்னாவோ, இது வைரமே இல்லீங்க பாட்டில் ஓபனர் என கூறி ரசிகர்களை வியக்க வைத்துவிட்டார்.
விஜய் வர்மாதமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த வைர மோதிரம் குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு, மோதிரம் பற்றி வரும் செய்திகளில் என் பெயர் இல்லையே என காமெடி செய்தார்.
Tamannaah: தமன்னாவின் ரூ. 2 கோடி வைர மோதிரம்: விஜய் என்ன இப்படி பொசுக்குனு கலாய்ச்சுட்டாரு