சென்னை: “ஆன்டியைக் கொலை செய்ததற்கு இதுதான் காரணம்'' – மருமகனின் தகவலால் ஷாக்கான குடும்பத்தினர்!

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு மரியன் லாசர் என்ற மகனும், 23 வயதில் மகளும் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு இடது காலில் குறைபாடு உள்ளதால் அவர் தாங்கி தாங்கித்தான் நடப்பார். இந்த நிலையில் கணவர், மகன், மகள் என மூன்று பேரும் வேலைக்குச் சென்று விட்டதால் வேளாங்கண்ணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து மகன் மரியன் லாசர் … Read more

காவலர் பணியிடங்கள் – 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 31) தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் … Read more

டி.கே.சிவகுமார் சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக ஐகோர்ட் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பிப்.10-ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் … Read more

தமிழகத்துக்கு யூடர்ன் அடித்த கோடைக்காலம்.. பொசுக்கி எடுக்கப் போகுதாமே.. முக்கிய வானிலை அப்டேட்

சென்னை: கோடைக்காலம் முடிந்து இப்போது தான் தமிழக மக்கள் பெரு மூச்சு விட்ட நிலையில், மீண்டும் கோடை வெயில் யூடர்ன் அடித்து தமிழ்நாட்டுக்கு நுழைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலும், அனல் காற்றும் பொசுக்கி எடுக்கும் அளவுக்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாததை போல இந்த ஆண்டு கோடைக்காலம் நெருப்பாக சுட்டெரித்தது. எப்போதும் மார்ச் மாதம் தொடங்கும் கோடை, நடப்பாண்டில் பிப்ரவரியிலேயே தொடங்கி தனது கோரத் தாண்டவத்தை காட்டியது. தமிழகத்தில் … Read more

Tamannaah:சுறா படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும்: தமன்னா

Thalapathy Vijay: சுறா படம் ஓடாது என தனக்கு ஏற்கனவே தெரியும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் தமன்னா. ​சுறா​எஸ். பி. ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சுறா படம் கடந்த 2010ம் ஆணடு வெளியானது. படம் பார்த்த விஜய் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். சுறா படம் தோல்வி அடைந்தது. அந்த படத்தில் ஏன் தளபதி நடித்தார் என விஜய் ரசிகர்கள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சுறா படத்தின் தோல்வி குறித்து … Read more

திருப்பதி லட்டுவில் இனி நந்தினி நெய் இல்லை… திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

திருப்பதி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுக்கள் இது வரை, கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கும் நந்தினி நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்தது.

கையில் தாலியுடன் முத்துப்பாண்டி… சண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – அண்ணா சீரியல்

 Zee Tamil Anna Serial July 31st 2023 Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

பெரியார், அண்ணாவுக்கு பதிலாக இன்பநிதிக்கு தான் திமுகவில் முக்கியத்துவம் – ஜெயக்குமார்

பெரியார், அண்ணா படங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக முப்பெரும் விழாக்களில் உதயநிதி, இன்பநிதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

வணங்கான்: அறிவிப்பின்றி தொடங்கிய ஷூட்டிங்; சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்; கதாபாத்திரம் இதுதான்!

2022 மார்ச் 28 ஆம் தேதி, பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிப்பில் வணங்கான் படம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்புக்குப் பின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு பற்றிய செய்தி வரும் என்று பார்த்தால், டிசம்பர் 4, 2022 அன்று இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருந்தார். அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். சூர்யா, … Read more

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்பத்தால் அசவுகரியங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை … Read more