தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது. அமைச்சர் பெரியகருப்பன், சென்னை தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒரு சிக்கலா.. இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கே சவாலாகும் காதல்! ஆந்திரா வந்த இலங்கை பெண்

அமராவதி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் காதலரை தேடி இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கிறார். ஒரே மாதத்தில் இதேபோன்று மூன்றாவது சம்பவம் அரங்கேறியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி. பேஸ்புக் பயனாளரான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பேஸ்புக்கில் பேசி பழகி வந்து Source Link

ஜவான் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஜவான். நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனேவும் நடித்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது … Read more

Ajithkumar: அஜித்தின் 31 வருட கேரியர்.. 600 அடிக்கு பேனர் வைத்து கொண்டாடிய கர்நாடக ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித்குமார் கடந்த 1992ம் ஆண்டில் பிரேம புத்தகம் என்ற தெலுங்குப்படத்தில் நடித்து சினிமாவில் தன்னுடைய அறிமுகத்தை செய்தார். தொடர்ந்து தமிழில் அமராவதி என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். இந்தப் படம் அந்த அளவிற்கு கைக்கொடுக்கவில்லை. அடுத்ததாக 1995ம் ஆண்டில் வெளியான ஆசை படம் தமிழ் சினிமாவில் அஜித்தை அனைவரும் திரும்பிப் பார்க்க செய்தது.

இனி சிவில் சர்வீஸ் தேர்வைப் பற்றி பயமேன்!- திருச்சியில் சிறப்பாக நடந்த ஆனந்த விகடனின் பயிற்சி முகாம்

சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து ‘UPSC / TNPSC group I & II தேர்வுகளில் வெல்வது எப்படி’ என்கிற இலவச பயிற்சி முகாமினை இன்று திருச்சியில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு M. பிரதீப் குமார் IAS , திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் திருமதி M. சத்தியபிரபா IPS, திரு V … Read more

துணைத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்: தேர்வுத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: துணைத்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் பணிகள் தேர்வுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வில் தோல்வி பெறும் மாணவர்களுக்கு தேர்வுத்துறையால் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று உயர்கல்வியை மாணவர்களால் தொடர முடியும். இந்நிலையில் துணைத்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் … Read more

ராஜீவ் காந்தி இறப்புக்குப் பின் எப்படி சமாளித்தீர்கள்? – சோனியா காந்தியிடம் ஹரியாணா பெண் விவசாயி கேள்வி

புதுடெல்லி: ராஜீவ் காந்தி இறப்புக்குப்பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என ஹரியாணா பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது ஹரியாணா மாநில பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது தலைநகர் டெல்லியை பார்க்க வேண்டும் என்ற அந்த பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற அவர்களுக்கு தங்கள் வீட்டில் விருந்தளித்தார் ராகுல். அப்போது, ராகுல்,சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் ஹரியாணா பெண் … Read more

மணிப்பூர் விவகாரம்… ஓகே சொன்ன மத்திய அரசு… நாடாளுமன்றத்தில் இன்று சரியா 2 மணிக்கு!

நாடாளுமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தி, மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை அமல்படுத்தி குறை நிறைகளை சரிசெய்ய முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு கூச்சல், குழப்பம், அமளி, ஒத்திவைப்பு என மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்கள் தான் அரங்கேறி வருகின்றன. கடந்த கூட்டத்தொடர் முழுவதுமாக வீணானது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வாரமாக அமளி துமளியாக கடந்து போனது. மத்திய அரசு திட்டம் அதேசமயம் தாங்கள் திட்டமிட்டபடி மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசு … Read more

என் பலத்தை பாத்துக்கோங்க… உலகை மிரள வைத்த ரஷ்ய அதிபர் புடின்… கடலில் பெரிய சம்பவம்!

சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளில் ஒன்றாக இருப்பது ரஷ்யா – உக்ரைன் போர். சில வாரங்கள், சில மாதங்கள் நீடித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓராண்டிற்கும் மேலாக போர் தொடர்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலம் வாய்ந்த ரஷ்யாவா இப்படி? எனக் கேட்க வைக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளுக்கு பஞ்சமில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவிற்கு ஆதரவாக சில நாடுகளும் நிற்கின்றன. ஐரோப்பாவில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் தொடர்வது கவனிக்கத்தக்கது. அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி … Read more

Vidaa Muyarchi Update: விடாமுயற்சி பற்றி இந்த அப்டேட் தான் கிடைச்சிருக்கு: சாரி அஜித் ரசிகாஸ்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படம் விடாமுயற்சி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது லைகா நிறுவனம். படப்பிடிப்பு மே மாதமே துவங்கும் என்றார்கள். அஜித் பிறந்தநாள் முடிந்த கையோடு படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கேப்டன் மில்லர் தமிழ் சினிமாவின் பாகுபலி இதையடுத்து ஜூன் மாதம் என்றார்கள், பின்னர் ஜூலை என்றார்கள். இதற்கிடையே பைக் டூருக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் அஜித். அவர் கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் … Read more