பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது கொலம்பியா

சிட்னி, பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘எச்’ பிரிவில் சிட்னியில் நேற்று அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஜெர்மனி, கொலம்பியாவை எதிர்கொண்டது. இதில் பந்து பெரும்பாலான நேரம் ஜெர்மனி வசமே (68 சதவீதம்) சுற்றி வந்தது. அதிகமான ஷாட்டுகளையும் இவர்கள் தான் உதைத்தனர். ஆனால் அதிர்ஷ்டக்காற்று கொலம்பியா பக்கம் வீசியது. … Read more

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு – சவுதி அரேபியா ஏற்பாடு

துபாய், உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன. ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடு களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். உச்சிமாநாடு … Read more

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் மீண்டும் வலியுறுத்தல்

பல்கலைக்கழகமும் அதன் பிரிவுகளும் பலப்படுத்தப்படுவதுடன், வரக்கூடிய உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்யும்.சகல வசதிகளைக் கொண்ட கெடட் மெஸ் மற்றும் தங்குமிட வசதிகள் தெற்கு வளாகத்தில் திறந்து வைப்புசுற்றாடல் மற்றும் தொழில்துறை தொடர்பான ஜேர்னல் ஒப் பில்ட் என்வைமென்ட்’ மற்றும் ‘நிலையான எதிர்காலத்திற்கான தரம் என்ற சஞ்சிகைகள் வெளியிடப்பட்டது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஜூலை 28) மீண்டும் வலியுறுத்தினார். “இந்த … Read more

பாகிஸ்தானில் மனித குண்டுவெடிப்பு தாக்குதல்… 42 பேர் பலி – பின்னணி என்ன?

பாகிஸ்தானில் நேற்று மாலை தொழிலாளர்கள் மாநாட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் மனித குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

தீயப் பழக்கங்களிலிருந்து உங்களை விடுவிக்கும் ஸ்ரீ அனுமன் சாலீசா – மூல மந்திரமும் தமிழாக்கமும்!

அனுமனை எண்ணி வழிபட்டாலே அங்கு ஸ்ரீராமரும் தோன்றிவிடுவார். ரகுகுல ரட்சகனான ஸ்ரீஅனுமன் தைரியத்தை அளிக்கும் கடவுள். மனதில் குழப்பமோ, கவலையோ, அச்சமோ இருந்தால் அனுமனை தரிசிப்பதோ, தியானிப்பதோ நல்லது. நிச்சயம் உங்கள் துயரங்கள் யாவையும் நீக்க வல்லவர் அனுமன். அதிலும் அனுமனை அனுமன் சாலீசா எனும் இந்த துதி சொல்லி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார்கள் ஆன்றோர்கள். துளசிதாசர் வட மொழியில் அருளிய அனுமன் சாலீசா எனும் பாடலை மெய்யுருகப் பாடிப் பணிவாருக்கு கிரக தோஷங்கள் … Read more

அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு 2 வாரங்களில் முதல்வருக்கு 15 ஆயிரம் கடிதம்: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அனுப்பியுள்ளனர்

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடந்த 2 வாரங்களில் 15 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் செலவை ஈடுசெய்ய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்குவது வழக்கம். இந்தத் தொகை அவ்வப்போது உயர்த்தப்படும். அதன்படி, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களைப் பொருத்தவரை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் … Read more

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் இண்டியா டிவி செய்தி சேனல் மற்றும் சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து மக்களவைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தின. கருத்து கணிப்பு முடிவுகளில் கூறியிருப்பதாவது: நாடு … Read more

துபாய் ஷேக்கின் ராட்சத ஹம்மர் கார்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது ராட்சத ஹம்மர். இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி. இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ … Read more

கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்… இங்க தான் பெரிய சிக்கல்… சரியா ஒர்க் அவுட் பண்ணுமா தமிழக அரசு?

மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் பாட்டிலில் வைத்து விற்கிறீர்கள். அந்த பாட்டிலை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாயை கணக்கு வச்சு திரும்ப ஒப்படைக்கலாம் என்று பெரிய பிளானை ஒர்க் அவுட் செய்து வருகிறீர்கள். அதேமாதிரி ஆவின் பால் விஷயத்தில் செய்ய முடியாதா? இந்த கேள்வியை சமூக ஆர்வலர்களோ, பொதுமக்களோ கேட்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தான் தடாலடியாக கேட்டுள்ளது. ​ஆவின் பால் விற்பனைமேலும் இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கூட்டுறவு … Read more

ஓடும் ரயிலில் ஷாக்… ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸில் துப்பாக்கியை எடுத்த RPF வீரர்… ரத்த வெள்ளத்தில் பயணிகள்!

ரயில் எண் 12956 கொண்ட ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் பல்கார் ரயில் நிலையத்தை தாண்டி இன்று (ஜூலை 31) காலை சென்று கொண்டிருந்தது. அதில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து ரயில்வே பாதுகாப்பு படையின் மற்றொரு துணை காவல் ஆய்வாளரை நோக்கி சுட்டுள்ளார். அதன்பிறகு 3 பயணிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. பின்னர் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் குதித்து தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக … Read more