பழனி முருகன் கோயிலுக்கு இனி இந்து அல்லாதோர் செல்ல முடியாது.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மதுரை: பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை எனக் கூறி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை பெரும் சர்ச்சையானதால் அகற்றப்பட்ட சூழலில், தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலக பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை … Read more

Jailer: நெருங்கும் ரிலீஸ் தேதி: 'ஜெயிலர்' ரஜினிக்கு பறந்த திடீர் கோரிக்கை.!

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பாக கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் ஆடியோ லான்ச்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் ‘ஜெயிலர்’. கோலிவுட் சினிமா வியக்கும் அளவிற்கு இந்தப்படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் ரஜினிக்கு கோரிக்கை ஒன்று பறந்துள்ளது.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்சிறுத்தை சிவா … Read more

எல்பிஎல் போட்டி கிரிக்கெட் கிரவுண்டில் பாம்பு! தினேஷ் கார்த்திக்கின் வைரல் ட்வீட்

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்றால், கிரிக்கெட் வீரர்கள் எம்மாத்திரம்? பந்துக்கு அவுட்டானால் விளையாட்டில் இருந்து தான் அவுட், ஆனால் பாம்பு அவுட் செய்தால்? பயம் இருக்காதா என்ன? 2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஆரம்பமானது, ஆனால் Galle Titans மற்றும் Dambulla Aura அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் தடங்கல் ஏற்பட்டது இந்த வைரல் சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்து ஆட்டத்தை நிறுத்தியது. இந்த … Read more

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதி

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, அங்கு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அறிவுகளில் குளிக்கவும், … Read more

Enforcement department raids at places owned by Congress – MLAs | காங்., – எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ஹரியானாவில் பணமோசடி வழக்கில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., தரம் சிங்சோக்கருக்கு சொந்தமான 11 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள சமல்கா தொகுதியைச் சேர்ந்த காங்., – எம்.எல்.ஏ., தரம் சிங் சோக்கர், 59, தன் மகன்களுடன் சேர்ந்து இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். குருகிராம் அருகே மலிவு விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாகக் கூறி 1,500 பேரிடம் … Read more

கில்டு தொடர்பான வழக்கு : கோர்ட் உத்தரவு

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவராக இருப்பவர் சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் சங்கத்தின் பணிகளை செய்ய விடாமல் செயலாளர் மற்றும் பொருளாளர் இடையூறு செய்வதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளரை பணி செய்ய விடாமல் தலைவர் ஜாக்குவார் தங்கம் தடுக்ககூடாது. சங்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள் யாரையும் சங்கத்திற்குள் அனுமதிக்க கூடாது. இதற்கு … Read more

DD Returns: அதிரி புதிரி ஹிட் அடித்த டிடி ரிட்டர்ன்ஸ்… வெற்றியை தாறுமாறாக கொண்டாடிய சந்தானம்!

சென்னை: காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், இப்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். ஹீரோவாக பல படங்கள் நடித்துவிட்ட சந்தானத்துக்கு பெரிதாக ஹிட் என எதுவும் அமையவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு ஹீரோவாக பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. இதனையடுத்து இந்த வெற்றியை செம்ம தரமாக கொண்டாடி தீர்த்துள்ளார் சந்தானம். டிடி

Mahindra Thar EV – ஆகஸ்ட் 15.., மஹிந்திரா தார் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகிறதா ?

இந்தியாவின் பிரசத்தி பெற்ற லைஃப் ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யூவி மாடலான மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் கான்செப்ட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஸ்கார்பியோ பிக்கப் அறிமுகத்தின் போது காட்சிப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் 5 கதவுகளை பெற்ற தார் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளதால், தார் அடிப்படையில் எலக்ட்ரிக் காரை தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. Mahindra Thar EV தென் ஆப்பிராக்காவில் உள்ள கேப் … Read more

`ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டவே மதுரையில் அதிமுக மாநாடு!' – தேனியில் கே.பி.முனுசாமி

க​டந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தேனியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் ஒன்றாக மேடையேறினர். அதன் பிறகு நாளை நடைபெறவிருக்கும் தி.மு.க-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒன்றாக மேடையேறவிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க பொன்விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20​-ம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. ​தேனி மாவட்ட அ.தி.மு.க ​சார்பில் இ​ந்த மாநாட்டுக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அழைத்து வருவது தொடர்பா​க நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவாநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் ப.சஞ்சய்காந்தி கூறியதாவது, “இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு … Read more