திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். சனிப்பிரதோசமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் 22 ஆண்டுகள் கழித்து இங்கு மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கோயிலின் கிரிவலபாதைக்கு மின்விளக்குகள் அமைத்து தந்த ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்ததை அறிந்து அவரைக்காண ஏராளமானோர் திரண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த ஒருவாரமாக திருவண்ணாமலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவரும் ரஜினிகாந்த் நேற்று திடீரென கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். … Read more

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ரிலீஸ் எப்போது?

புதுமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட நாட்கள் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வந்த நிலையில் … Read more

Debt Restructuring Scheme Sri Lanka Parl., Approved | கடன் மறுசீரமைப்பு திட்டம் இலங்கை பார்லி., ஒப்புதல்

கொழும்பு,-உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, இலங்கை பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் வழங்கியது. இதற்கு, உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது உள்ளிட் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், தலைநகர் … Read more

அடக் கன்றாவியே.. ஆபாசத்தின் உச்சம்.. மார்பு டிசைனில் கோல்ட் மோல்டிங்.. எல்லை மீறிய பிக் பாஸ் நடிகை!

மும்பை: தனது முன்னழகை அப்படியே மோல்டு செய்து கோல்டு டிசைனில் உருவாக்கி அதை அணிந்து கொண்டே வெளியிடங்களுக்கு சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத். சிறு வயதில் தனது புகைப்படங்கள் ஆபாச இணையத்தில் வந்ததால் வீட்டில் அப்பா தன்னைப் போட்டு அடித்தார். அதனால், வீட்டை விட்டே ஓடி வந்து விட்டேன் என பேட்டிக் கொடுத்த உர்ஃபி ஜாவேத் தற்போது டோட்டலாகவே ஆபாச நடிகையாக மாறி விட்டார் என நெட்டிசன்கள் இந்த … Read more

சிவகங்கை | சிவப்பு நிற பொட்டாஷ் உரத்தால் சொட்டு நீர் பாசன குழாய்களில் அடைப்பு – விவசாயிகள் புகார்

சிவகங்கை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் சிவப்பு நிற பொட்டாஷ் உரம், சொட்டுநீர் பாசன குழாய்களை அடைப்பதாக புகார் எழுந்துள்ளது. பயிர்களுக்கு தேவையான முதன்மை சத்துகளில் சாம்பல் சத்து இன்றியமையாததாக உள்ளது. இது பொட்டாஷ் உரத்தில் கிடைக்கிறது. மேலும் பயிருக்கு பூச்சி தாக்குதலை தடுக்கும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் சாயாமல் திடமாக இருக்கவும், வறட்சியை தாங்கவும் உதவுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் கரும்பு, காய்கறி பயிர்களுக்கு முக்கியமாக பயன்படுகிறது. கடந்த … Read more

ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்த தாசில்தார் கைது – ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்த லோக் ஆயுக்தா போலீஸார்

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தாசில்தார் ஒருவர் ரூ. 1000 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளார். அவரை லோக் ஆயுக்தா போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தாசில்தார் அஜித்குமார் ராய் (45) அதிகளவில் லஞ்சம் வாங்குவதாகவும், பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து லோக் ஆயுக்தா போலீஸார் கடந்த புதன்கிழமை அஜித்குமார் ராய்க்கு சொந்தமான வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, உறவினரின் வீடுகள், நண்பர்களின் அலுவலகங்கள் உட்பட 12 … Read more

மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு கிடைக்கும்? வேகமெடுக்கும் பணிகள் – களமிறங்கிய ஐஏஎஸ் அதிகாரி!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது எவ்வாறு செயல்படுத்தப்படப் போகிறது, யாரெல்லாம் இதன் பயனாளர்கள், என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எந்த பிசிறும் இல்லாமல் செயல்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா. அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இளம் ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத் இத்திட்டத்திற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக … Read more

முடங்கிய ட்விட்டர்.. சில மணி நேரங்களில் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மஸ்க்.. இப்படி ஒரு கட்டுப்பாடா?

International oi-Mani Singh S வாஷிங்டன்: உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு நெட்டிசன்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நேற்று இரவு சர்வதேச அளவில் முடங்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஒரே ஆண்டில் 3-வது முறையாக ட்விட்டர் முடங்கியுள்ளது. நெட்டிசன்கள் ட்விட்டரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதால் ட்விட்டரை கடுமையாக விமர்சித்தனர். … Read more

பொங்கலுக்கு தள்ளிப்போகிறது தங்கலான்?

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு அதன் பிறகு சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்த நிலையில் இப்போது சென்னையில் மீண்டும் … Read more

Canadian politics encouraging Khalistan terrorists! | காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் கனடா அரசியல்!

டொரான்டோ-உள்நாட்டு காரணங்கள் மற்றும் ஓட்டு வங்கி அரசியலுக்காகவே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கனடா அரசு ஊக்குவிப்பதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நம் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஏராளமானோர் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். குறிப்பாக, நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்ற சீக்கியர்கள், கனடாவில் அரசுத் துறை மட்டுமின்றி தனியார் அமைப்புகளிலும் அதிகளவில் … Read more