தயாரான நெல்லையப்பர் தேர்|மூங்கில் குழலில் ஒளிரும் விளக்குகள்|சனிப்பிரதோஷ வழிபாடு-News in Photos

கன்னியாகுமரி: நாகர்கோவில் கோதைக்கிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் நந்திஸ்வரர் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கைவினைப்பொருட்கள் அங்காடியில் புதுமையான வடிவில் காணப்படும் ஒளிரும் மூங்கில் குழல் விளக்குகள். திருநெல்வேலி: நெல்லைப்பர் கோயில் ஆனிதேர்திருவிழாவை முன்னிட்டு வடங்கள் அமைத்து தயாரான நெல்லையப்பர் தேர். சேலம்: எடப்பாடி தொகுதியில் உள்ள பெரிய சோர்கையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் … Read more

சென்னையில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இன்று வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மிச்சம் இருக்கிறது. இப்பணிகள் நடைபெற்று வரும் காரணத்தாலும், மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வரும் காரணத்தாலும் சில சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.69.78 கோடி செலவில் திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள “செங்கை சிவம் பாலம்”, கொளத்தூரில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் ஆதிக்கம், உலக அளவில் நமது அடையாளமாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய கூட்டுறவு காங்கிரசின் 17வது மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ.90 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே செலவிடப்பட்டது. ஆனால், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் என்ற ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே அதைப்போல மூன்று மடங்கு நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

காடுவெட்டி குருவை விட்டு என்னை கேவலமாக பேச வைத்தவர் ராமதாஸ்… "வளர்ப்பு அப்படி".. திருமாவளவன் ஆவேசம்

விழுப்புரம்: காடுவெட்டி குருவை விட்டு என்னை கேவலமாக பேச வைத்து ரசித்தவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கருணாநிதியையும், ஸ்டாலினையும் ராமதாஸ் எப்படி பேசுவார் என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார். விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் பாலுவை, கடந்த மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் அண்மையில் … Read more

Leo: மீண்டும் காஷ்மீர் செல்லும் லியோ படக்குழு..மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக்கான தளபதி..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக முடிவடைந்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை குறுகிய காலகட்டத்திற்குள் அசால்டாக எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் லோகேஷ் எடுத்து முடித்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள், இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரைப்படம் என அனைத்தும் இருந்தாலும் மிகவும் … Read more

செந்தில் பாலாஜி ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் செயின் பறிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அட்டகாசமாக விளையாடிய அவர் மீது இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைத்தாலும், வயது மற்றும் இப்போதைய பார்ம் காரணமாக இனி இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காத தினேஷ் கார்த்திக், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் … Read more

ஜியோ வழியில் செல்லும் ஹாட் ஸ்டாரில் இலவச கிரிக்கெட் ஸ்டிரீமிங்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்களுக்கு கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்கை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகப் பார்க்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதையும், கட்டணச் சந்தா செலுத்தி பார்க்க முடியாத பார்வையாளர்களுக்கு சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ட்ரீமிங் தளம் கூறியுள்ளது. ஆசியா கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் … Read more

2 முறை ICC ODI World Cup வென்ற மே. இந்திய தீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 13வது உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் முன்னணி அணியாக திகழ்ந்துவந்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் இடம்பெறாமல் போனது ரசிகர்களிடையே … Read more

தான்யா – பாலாஜி மோகன் குறித்து அவதூறு : கல்பிகா வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்', தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'மாரி', தனுஷ், சாய்பல்லவியின் நடிப்பில் மாரி 2 ஆகிய படங்களை இயக்கினார். அதோடு மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' படத்தையும் தயாரித்தார். பாலாஜி மோகன் 2012ம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை … Read more