Rajinikanth: மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி: ரசிகர்கள் நெகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் மயில்சாமி. பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மயில்சாமி கடந்த பிப்ரவரி … Read more

இந்தியா வல்லரசாக இருந்தால், பாகிஸ்தானும் சளைத்ததில்லை! சீறும் இம்ரான் கான்

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடரில் பிசிசிஐ மற்றும் பிசிபி பங்கேற்கும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் பிசிசிஐயும் பிசிபியும் நேருக்கு நேர் மோதின. பல பரபரப்புகளுக்குப் பிறகு, இரு வாரியங்களும் ஆசிய கோப்பை 2023இல், கலப்பின மாதிரியில் விளையாட ஒப்புக்கொண்டன, அங்கு முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடப்படும், கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது … Read more

மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

டில்லி புதிய நாடாளுமன்றத்தில் இந்த வருட மழைக்கால கூட்டத் தொடர் ந்டைபெற உள்ளது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தை பிரதம்ர் மோடி திறந்து வைத்தார்,   இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக கூறப்பட்டு வந்தது. இன்று மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 20 முதல் நாடாளுமன்ற … Read more

Gujarat riots case: Court orders Teesta Setalwat to surrender | குஜராத் கலவர வழக்கு: சரணடைய டீஸ்டா செதல்வாட்டிற்கு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் கலவர வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இடைக்கால ஜாமின் பெற்ற பெண் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டிற்கு குஜராத் ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்து அவரை கோர்ட்டில் சரணடய உத்தரவிட்டது. 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய் வழக்குகள் தொடர்ந்ததாக பெண் சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை செசன்ஸ் மற்றும் குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரது அப்பீல் மனுவை விசாரித்த … Read more

தீவிரவாதம் பற்றி பேசும் '72 ஹூரைன்'

சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள இளம் பெண்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக அந்த படத்தின் கதை இருந்தது. தற்போது தீவிரவாதம் பற்றி '72 ஹூரைன்' என்ற படம் உருவாகி உள்ளது. ஹூரைன் என்றால் 'கன்னிகள்' என்று பொருள். இந்த படத்தை 'லாகூர்' படத்தை இயக்கி பரபரப்பு கிளப்பிய சஞ்சய் பூரன் சிங் சவுகான் இயக்கி உள்ளார். ஆமிர் பஷிர், பவன் மல்ஹோத்ரா, ரஷித் நாஜ் … Read more

Maamannan: இரண்டே நாளில் மாமன்னன் சக்சஸ் மீட்… கேக் வெட்டிய ஏஆர் ரஹ்மான்… ஏன் இந்த அவசரம்?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது. பக்ரீத் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் மாமன்னன் படத்திற்கு சிறந்த ஓபனிங் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இரண்டே நாட்களில் மாமன்னன் படத்தின் சக்சஸ் மீட்டிங்கை நடத்தி முடித்துள்ளது படக்குழு. இரண்டே நாளில் மாமன்னன் சக்சஸ் மீட்: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு … Read more

ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் 1.61 லட்சம் கோடி – மத்திய நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி, ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 12 சதவீதம் அதிகமாகும். நான்காவது முறையாக மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளில் முதல் காலாண்டுக்கான சராசரி மாதாந்திர மொத்த ஜி.எஸ்.டி வசூல் முறையே ரூ.1.10 லட்சம் கோடி, ரூ.1.51 லட்சம் கோடி மற்றும் ரூ.1.69 … Read more

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி…11 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீராங்கனை – காரணம் என்ன..?

காலே, நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 329 ரன்கள் … Read more

கென்யாவில் தாறுமாறாக ஓடிய டிரக்; பல வாகனங்களில் மோதி விபத்து: விடிய விடிய மீட்பு பணி

நைரோபி , கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 51 பேர் பலியாகினர். 32 பேர் காயம் அடைந்தனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். … Read more