மதுரை கட்டட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கட்டிட ஈடுபாடுகளில் மூன்று பேர் சிக்கி உள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. The post மதுரை கட்டட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு first appeared on www.patrikai.com.

கோவையில் நடுரோட்டில் இழிவாக பேசிய அடாவடி லேடி.. பதிலடி கொடுத்து தெறிக்கவிட்ட தூய்மை பணியாளர்

Tamilnadu oi-Velmurugan P கோவை: கோவையில் குப்பை வீசிய விவகாரத்தில் நடுரோட்டில் இழிவாக பேசி மிரட்டிய அடாவடி லேடியை “முடிஞ்சா..தூக்குமா!” என தூய்மை பணியாளர் பதிலடி கொடுத்து தெறிக்கவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் குப்பையை நடுரோட்டில் வீசிய பெண, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.இந்த பிரச்சனையை பற்றி பார்க்கும் முன்பு குப்பை தொட்டிகள் குறித்தும், தூய்மை பணியாளர்கள் படும் அவதிகள் பற்றியும் இங்கே பார்த்துவிடுவோம். கோவையில் மட்டுமல்ல, சென்னை … Read more

Increasing global demand for Indian products: PM Modi speech | இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: பால் பொருட்கள் முதல் நெய் வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து உள்ளது எனவும், சிறுதானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய கூட்டுறவு சங்கத்தின் 17 வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2.5 லட்சம் கோடி … Read more

லட்சுமி, மதுபாலா நடித்த வெப்தொடர் 6ம் தேதி வெளியாகிறது

லட்சுமியும், மதுபாலாவும் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. இதில் இவர்களுடன் சாந்தி நடித்துள்ளார். இந்த தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மூன்று தலைமுறையை சேர்ந்த பெண்கள் ஜாலியாக ஒரு பயணம் கிளம்புகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை 8 எபிசோட்களாக உருவாக்கி இருக்கிறார்கள். இதில் பாட்டியாக லட்சுமியும், மகளாக மதுபாலாவும், பேத்தியாக சாந்தியும் நடித்துள்ளார்கள். வருகிற 6ம் தேதி ஓடிடியில் தமிழ், தெலுங்கு, … Read more

Chinese President Xi Jinping will attend the Shanghai Cooperation Summit | ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்கிறார்

பீஜிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, வரும் 4ம் தேதி நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து, 2001ல், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில், 2017ல் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. இதன் வருடாந்திர மாநாட்டை, ஒவ்வொரு நாடும் … Read more

Anand Raj: எனக்கும் ஜாதி அடையாளம் இருக்கு… நடிகர் ஆனந்தராஜ் பேட்டி

சென்னை: எனக்கும் சாதி அடையாளம் இருக்கு என்று நடிகர் ஆனந்த் ராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகி பலவிதமான சர்ச்சைகளை கிளப்பி வருகிறது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். மாமன்னன்: மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதையும் தாண்டி, நடிகர் வடிவேலுவின் கதாபாத்திர வடிவமைப்பே பெரும்பாலான சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து தரப்பினரும் படத்தை … Read more

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 0 முதல் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்த பாவனையாளர்களுக்கு, மின் கட்டணங்களில் இருந்து 65 வீதம் குறைவடையும் என்பதுடன், அலகொன்றின் விலை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்தக் கட்டணம் 400 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைவடையும். 60 அலகுகளுக்கு குறைவான பாவனையாளர்களுக்கான அலகின் விலை 42 ரூபாய் முதல் … Read more

“கவின்கேர் – எம்எம்ஏ சின்னிக்கிருஷ்ணன் இன்னோவேஷன் விருது" தொழில்முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்…!

திறன்மிக்க தொழில்முனைவோர்களை அடையாளம் காணும் 12 -வது  சின்னிக்கிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள இந்திய தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை கவின்கேர் நிறுவனம் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் உடன் இணைந்து வழங்கி வருகிறது. தொழில் முனைவோரின் தயாரிப்புகள் அல்லது அவர்கள் சேவையின் தனித்தன்மை அடிப்படையிலும், நிலைத்தன்மை மற்றும் சமூக நலன்களைக் கருத்தில் கொண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு … Read more

தேசிய மருத்துவர்கள் தினம் | மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: மருத்துவர்கள் தங்களின் தன்மையால் தேசத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவர்கள் தினத்தில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்களும் தங்களின் மிக உயரிய துணிச்சல், மிகுதியான அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையால் நமது தேசத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், சுயசார்பாகவும் ஆக்குகிறீர்கள். மறுமலர்ச்சி இந்தியாவுக்கு பேரார்வத்தை ஏற்படுத்துபவர் தாங்களே.” இவ்வாறு அதில் கூறியுள்ளார். “On … Read more

“பொது சிவில் சட்டம் இந்திய சிந்தனைக்கு எதிரானது” – மேகாலயா முதல்வர் கருத்து

ஷில்லாங்: “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, பன்முகத்தன்மையே நமது பலம். பொது சிவில் சட்டம் என்பது இந்திய சிந்தனைக்கு எதிரானது” என்று மோலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார். தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வடகிழக்கு ஒரு தனித்தவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருங்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. … Read more