Revenge for Nahel – 4வது நாளாக பற்றி எரியும் பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு அதிபர் மேக்ரான் கோரிக்கை
பாரிஸ்: பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட மோதல் 4வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை தெருவில் இறங்கிப் போராடாதவாறு கண்காணிக்கும்படி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கோரியுள்ளார். கூடவே சமூகவலைதளங்கள் வன்முறைக்கு தூபம் போடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூடும்; வைரல் வீடியோவும்: பாரிஸ் புறநகரான நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன … Read more