Citroen C3 Aircross Mileage – சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மைலேஜ், புக்கிங் விபரம் வெளியானது

செப்டம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் மைலேஜ் மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. ஒற்றை என்ஜினை பெற்றுள்ள இந்த மாடல் கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முன்பதிவு சி3 ஏர்கிராஸ் காருக்கு துவங்கப்பட்டு, டெலிவரி அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளது. பண்டிகை காலத்துக்கு முன்பாக டெலிவரி வழங்குவதனை சிட்ரோன் உறுதிப்படுத்தியுள்ளது. Citroen C3 Fuel Efficiency 5500rpm-ல் 110 PS பவர் … Read more

கடல் அட்டைகள் பதப்படுத்தும் நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு

கடல் அட்டைகள் பதப்படுத்தும் நிலையம் ஒன்று கிளிநொச்சி பள்ளிக்குடா பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தவினால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடல் அட்டைகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படுகின்ற கடல் அட்டைகள் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காhன பதப்படுத்தல் நிலையமாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்… வடமாகாணத்தில் மீனவ சமூகம் மற்றும் வியாபாரிகள் கடல் அட்டைகளை வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். … Read more

கருக்கலைப்பு செய்த டாக்டர்களிடம் மாமூல்; தலைமறைவாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?!

கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் மகிதா அன்ன கிறிஸ்டி. இவரின் கணவரும் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட ஒரு வழக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்த தகவல், இன்ஸ்பெக்டர் மகிதாவுக்குத் தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மகிதா, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரித்தார். அதன் பிறகு சிறுமிக்கு எந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்தது என்ற விவரங்களைச் சேகரித்த இன்ஸ்பெக்டர் மகிதா, கருக்கலைப்பு குற்றச்சாட்டில் … Read more

விலை மேலும் அதிகரிப்பு எதிரொலி: தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால், தக்காளி விளைச்சல் குறைந்தது. விளைச்சல் குறைந்ததால்தான், இந்த அளவுக்கு தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் … Read more

காதல் திருமணங்களில் பெற்றோர் சம்மதத்தைக் கட்டாயமாக்க ஆய்வு: குஜராத் முதல்வர் தகவல்

காந்தி நகர்: காதல் திருமணங்களில் பெற்றோர் சம்மதத்தைக் கட்டாயமாக்க சட்டப்படி வாய்ப்பு இருக்குமானால், அது குறித்து தனது அரசு ஆய்வு செய்யும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். படிதார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சர்தார் படேல் குழுமம் ஞாயிற்றுக்கிழமை மெஹ்சானாவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பூபேந்திர படேல், “திருமணத்துக்காக சிறுமிகள் ரகசியமாக வீட்டை விட்டு செல்லும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் … Read more

மகளிர் உரிமைத் தொகை வழங்க பணம் இல்லை.. போலீஸுக்கு ரூ.25 கோடி டார்கெட்.. ஜெயக்குமார் பகீர் தகவல்

சென்னை: தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பணம் இல்லாததால் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்க போலீஸாருக்கு அரசு டார்கெட் கொடுத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்குவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிதான் அக்கட்சி அரியணை ஏறியதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் … Read more

ரூ.500 கோடி பட்ஜெட்டாக இருந்தாலும் நடிக்க மாட்டேன்: மாளவிகா மோகனன் திடீர் முடிவு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடித்து வரும் இவர், சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது திரைப்பயணம் குறித்து முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகளான மாளவிகா துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போல’ என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின்னர் ரஜினியின் … Read more

லஞ்ச புகாரில் கைதான பெண் காவல் ஆய்வாளருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்: மருத்துவமனையில் அனுமதி

கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஜியோ vs ஏர்டெல்: பெஸ்ட் 5ஜி பிளான்கள்

டெலிகாம் துறையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. இதில் ஜியோ 5ஜி துறையில் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருகிறது. அதற்கேற்ப ஏர்டெல் நிறுவனமும் 5ஜி திட்டங்களையும் அடிப்படை கட்டமைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 5ஜி பிளான்களை கொண்டு வந்திருக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான்களில் எல்லாம் ஜியோ 5ஜி அறிமுகப்படுத்தியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது ஷாக்கை கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவன … Read more