நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து (29) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று அமைச்சரின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இங்கு பின்வரும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
– மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பு
– எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மலையகம் – 200 நிகழ்வு குறித்தும் விளக்கமளிப்பு
– இந்தியா சிறந்த முதலீட்டு வலயமாக மாறியுள்ள நிலையில், அதில் தமிழ் நாடும் மைய புள்ளியாக உள்ளது.
– மலையகம் – 200 நிகழ்வுக்கு சமாந்தரமாக முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்கான சாத்தியம் பற்றியும் ஆராய்வு.
– மீனவர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு,
– மலையகத்தில் கல்வி மற்றும் தொழில் பயிற்சி துறை மேம்பாடு
உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு தமிழகம் வழங்கிய உதவிகளுக்கும் அமைச்சர் இதன்போது நன்றியைத் தெரிவித்துள்ளார்.