சிட்னி,
மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத் தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.
கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சிந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப இந்த போட்டியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், பிரனாய், பிரியான்ஷூ ரஜாவாத் ஆகிய இந்தியர்களும் களம் இறங்குகிறார்கள்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்த சீசனில் 4 பட்டங்கள் வென்று அசத்திய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு (ஆக.21-27) தயாராகும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறது.